Sunday, July 18, 2021

More beautiful moon

 முழு நிலவு இன்று

அழகாய் தெரிகிறது, உன்

அழகை இன்று கடன் பெற்றதோ? 

Extra love

 பல அப்பாவிற்கு பெண் பிள்ளைகளுக்கும், பல அம்மாவிற்கும்ஆண் பிள்ளைகளுக்கும் இடையே கூடுதல் மெல்லிய அன்பு இழை ஓடி கொண்டிருக்கும்

சிறுபிள்ளை

 பிள்ளைகள் பெற்றோராகும் போது,பெற்றோர்கள் சிறுபிள்ளையாகிறார்கள், பெற்றோரை உன் பிள்ளை போல் பார்த்துக் கொள், நாளை நீயும் சிறுபிள்ளையாவாய்


One word, 2 word

 உன்னிடம் சொல்ல நினைத்து

இதயத்தில் பூட்டி வைத்த 

ஒரு வார்த்தை "காதல்", 

நீ சொன்ன " எனக்கு கல்யாணம் "

என்ற இரு வார்த்தையில்

இதயம் இரண்டானது, காதல் துண்டானது

(திருமணம்)

 காதல் 

(திருமணம்) 

முடிந்தது

வானம் அருகில்

 தொட்டு விடும் தூரம் தான்

வானம் நீ என் அருகில் இருக்கையில்

அன்பு மழை

 மழையில் ஒரு ☔ குடைப்பிடித்து இருவரும் சென்றாலும், உன் அன்பு

மழையில் நனைந்தேதான் செல்கிறேன்

பிம்பம்

 தவியாய் தவிக்கிறேன் தண்ணீரில்

தெரியும் உன் பிம்பம் 

கலையாமல் இருக்க

Public speaker

 சபையில் சரளமாக பேசும்

நான், உன்னிடம் ஓரிரு

வார்த்தை தான் பேசுகிறேன், 

வார்த்தைகளின்றி தவிக்கிறேன்,  நீ

பேசிக்கொண்டே இருக்கிறாய், நான்

கேட்டு கொண்டே இருக்கிறேன்

Love when

 மொட்டு மலர்ந்தது எப்போது? 

உன் மேல் காதல் 

பிறந்தது எப்போது? 

Friday, July 2, 2021

கவிதையா? காதலா?

 கவிதை வழியாக காதலை

சொல்லிவிட்டேன், பிடிச்சிருக்கு என்றாய், குழம்பிப் போய்

 தவிக்கிறேன், பிடித்தது கவிதையா? 

காதலா? 

கொரோனா


அருகில் சென்றால்,
தள்ளி தள்ளி போகிறாள்,
எனை தவிர்க்க பார்க்கிறாள்,
முகம் பார்த்து பேசாமல்
திரும்பி கொள்கிறாள்,
தவிப்பில் கேட்டேன் ஏன் என்று?
இடைவெளி தேவை கொரோனா காலம் என்றாள்

கேள்வி

 மகள் கேட்கும் ஒவ்வொரு

கேள்விக்கும் பெருமை கொள்கிறேன், 

மகளுக்கு தெரியவில்லை இவள்

கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும், 

கணவன் சிறுமை கொள்வானென

வயதான காலத்தில்

 வயதான காலத்தில் கை 

கோர்த்து, சிரித்துக் கொண்டு

செல்லும் தம்பதிகள் பார்த்து

இழிவாக நகைத்தார்கள்,இந்த

வயதில் தேவையாயென, 

தடுமாறாமல் ஒருவரை ஒருவர்

தாங்கி செல்கின்றனர் என 

அறியவில்லை அவர்கள்

நான்

 குழந்தையான என் விரல்

பிடித்து நடை பழக்கினாள் அம்மா, 

வாலிபத்தில்  கை கோர்த்து

உலா சென்றேன் மனைவியுடன், 

வயோதிகத்தில் தாங்கி பிடித்து

நடக்கின்றேன் என் மகளுடன், 

முதலும் கடைசியும் சார்ந்து

இருக்கிறோம், இடையில் மட்டுமே

தலைதூக்கும் "நான்"


சொல்லாமல்

 இருவரும் உரசி நடக்கிறோம், 

ஏதோ சொல்ல நினைக்கிறோம், 

சொல்லாமல் தவிக்கிறோம், நீ சொல்வாயென நானும், நான்

சொல்வாயென நீயும் எதிர்

பார்த்து ஏதேதோ பேசினோம், 

உனை பற்றி எனை சுற்றி

உள்ளோரிடம் பேசிக்கொண்டே இருக்கிறேன், எனை பற்றி உனை சுற்றி உள்ளோரிடம் பேசிக்கொண்டே இருக்கிறாய், இருந்தும் எதுவும் இல்லாதது போல், அவரவர் வழியில்

சென்று கொண்டு இருக்கிறோம்




Bus stop

 பேருந்து வந்து நின்றது, 

உன் பார்வை நீள்கிறது

எனை தேடி, என் பார்வை நீள்கிறது

உனை தேடி, பார்வைகள்

 சந்தித்ததும் இதயத்தில் இடி

மின்னல், நாணத்தால் நீ இமைகள்

மூட, நான் மட்டும் பார்த்துக்

கொண்டே இருக்கிறேன், பேருந்து

நகர்ந்தது, என் பார்வை 

உன்னுடன் பயணிக்கிறது, 

கண்கள் கலந்தது, 

இதயம் மாறியது, 

பேசுவது எப்போது, 

வாழ்க்கை தொடங்குவது எப்போது? 

Try again

 ஒவ்வொரு முறை வாழ்க்கையில்

தடுமாறும் போது, தூக்கிவிட

ஆட்கள் இருக்காது, நீயாக எழ வேண்டும், அப்போதுதான் அடுத்த முறை பயம் இருக்காது, மீண்டும்

மீண்டும் வீழ்ந்தாலும் எழ

முயற்சி செய், மீண்டு எழுந்தாலும், வீழ்ந்தாலும் முயற்சி

தான் முக்கியம், அது தான்

வாழ்க்கை, அது தான் பயணம்

சகிப்புத்தன்மை

 நான் நானாக, நீ நீயாக, 

அவரவர் அவரவராக இருந்தாலும்

விட்டு கொடுத்தல், சகிப்புத்தன்மை

இல்லா குடும்பம் நாணயத்தின்

இரு பக்கமாக கணவன் மனைவி

இன்றி, "நா" நயம் கெட்டு, உறவுகள் விட்டு போகும்

Opposite house

 உனை பார்த்தேன், உன் நடை செல்லும்

திசை பார்த்தேன், எதிர் வீட்டு புது குடி, 

முகம் பார்த்தேன், எங்கோ பார்த்த நியாபகம், உன் குடும்பம் என் குடும்பம் என வேறுபாடு இன்றி பழகி, இப்போது உன் ஒவ்வொரு செயலும் எனக்கு அத்துப்படி, பின்பு தான் தெரிந்தது என் அப்பாவின்இன்னொரு குடும்பம் என, 

மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறேன்

அண்ணணாக

Window

 சாளரம் வழியே என் காதல் பார்வை உன் இதயம் நுழைந்து உசுப்ப, நீ வீசும் ஓரக்கண்  பார்வை என்னுள்  ஏதோ பண்ண, காதல் மழையில் இருவரும் இணைந்து நனைய, சைகை மொழியில் ஆயிரம் பேசினோம், உனக்குள் உற்சாகம், எனக்குள் கொண்டாட்டம், பொங்கும் இன்பம் அனைத்து தடைகளையும் தாண்டும்

Father

 

அப்பா
ஈன்றெடுக்காத அம்மா, சம்பளம் இல்லா ஆசிரியர், வீட்டிலே ஒரு குரு, பணம் தந்து கொண்டே இருக்கும் அட்சய பாத்திரம்,  என் நம்பிக்கை, என் நட்சத்திரம், எனை தாங்கிய ஊன்றுகோல், எனது தூண்டுகோல்,
அவரால் நான், அவரின் பிள்ளை என்பதில் பெருமை எனக்கு, வாழ்க பல்லாண்டு, வளர்க உம் தொண்டு

Respect

 மரியாதை கலந்த அன்பு

என் அப்பாவிடம் அன்று, 

மரியாதை கலந்த அன்பு

என் பிள்ளையிடம் இன்று, 

எதாவது மரியாதை குறைவாக சொல்லி விடுவான் என்று