Tuesday, October 12, 2021

உன்னை விட அழகு

 உலகின் மிக அழகான

இடத்திற்கு கூட்டிச் சென்று

கேட்டாலும் உன்னை விட

அழகு என ஒப்புக் கொள்ள

என் மனம் மறுக்கிறது

நியாயங்கள்

 நியாயங்கள் சில நேரங்களில்

நியாயமாக, பல நேரங்களில் மௌனமாக?? 

சரி, தவறு

 சரி, தவறு, பல நேரங்களில் இரண்டுக்கும் நடுவில்?? 

உணர்வுக்கும் வயதிற்கும்

 

உணர்வுக்கும் வயதிற்கும் சம்பந்தம்
உண்டு, ஆனால் மாறலாம். ??

அப்பாவின் கட்டளைகள்

 இன்றும் என் அப்பாவின்

அதிகாரத்தை இரசிக்கின்றேன், கட்டளைகள் ஏற்கிறேன், நாம்

பெற்றோர் ஆனாலும் அப்பாவிற்கு

சிறு பிள்ளை தானே

மேலான தருணம்

 ஒவ்வொரு முறை மனம் விட்டு

சிரிக்கும் போது நினைத்துக்கொள்

வாழ்வின் மேலான தருணம் இது

ஆனந்தம்

 அவரவர் அம்மா வீட்டிற்கு

செல்லும் போது அதே

ஆனந்தம், இதில் ஆண், 

பெண் பேதமில்லை

அதன் போக்கில்

 வாழ்க்கை அதன் போக்கில்

போகிறது, நாம் தான்

நினைத்து கொண்டு இருக்கிறோம்

மாற்றிக் கொண்டு இருப்பதாக

திருமணம் தொடர காரணம்

 காதல் திருமணமே முறிகிறது

இக்காலத்தில், பெற்றோர்கள்

பார்த்து செய்த திருமணம்

தொடர காரணம் காதலா? 

சகிப்புத்தன்மையா? இரண்டுமா?

மாற முடியாமலும், இணையாமல்

 மாற்ற முடியாமலும், மாற 

முடியாமலும், இணையாமல் செல்லும்

தண்டவாளம் போல, பலர் 

குடும்ப வாழ்க்கை தொடர்கிறது, 

அதனால் தான் இன்னும்

இருக்கிறது குடும்பம் என்பது இந்தியாவில்

கை தட்டி வரவேற்கும்

 நாம் எது செய்தாலும்

கை கொட்டி சிரிக்கும்

உலகம், நாம் உச்சம்

அடையும் போது கை

தட்டி வரவேற்கும் 

உன் உயிர் மூச்சாக

 உன் விழியின் அசைவை

தொடர்கிறேன், அது என்னில்

முடிகிறது, உன் இதயத் துடிப்பைக்

கேட்கின்றேன், அது என் 

பெயர் சொல்கிறது, உன் 

சுவாசக் காற்றை பார்கிறேன், 

உன் உயிர் மூச்சாக

நானே இருக்கிறேன்

ஒப்பீடு

 ஒப்பீடு அடுத்தவரோடு அல்ல, 

உன்னை உயர்த்தி, உன் 

இலக்குகளை மாற்ற உனக்குள்

செய்து கொள்ள வேண்டும்

இலக்கு

 பிறக்கும் போதே யாருக்கும்

இலக்கு தெரிவதில்லை, போக

போக இலக்கு மாறிக்கொண்டே

செல்கிறது, போகும் வரை

உலகத்தில் உள்ளவர்

 உலகத்தில் எவ்வளவு பேர்

இருந்தாலும் உனக்கு தோள்

கொடுத்து உதவுபவரே  இந்த

உலகத்தில் உள்ளவர்

பொறிக்கப்பட்டிருக்கும்

 உலகம் என்ற நாடக மேடையில்

ஐம்பது வருடம் உன் பெயர்

பொறிக்கப்பட்டிருக்கும்

பெற்றோரிடம் தாராளம்

 மறப்போம் மன்னிப்போம்,

பெற்றோரிடம் தாராளம் 

காட்டும் சிறு வயதில்

குழந்தைகள்

புரிதல்

 பார்வை மாறிக் கொண்டே

இருக்கும், புரிதல் அவரவர்

பார்வை பொறுத்ததே

என் இதயத்தை திருடியவள்

 திருட்டை பார்த்து, திருடியைப்

பார்த்து சந்தோஷம் கொண்டேன், 

என் இதயத்தை திருடியவள்

நீ என்பதால்

சேயே தாயாவாளென

 பெண் குழந்தை பெற்றவர்களுக்கு

தெரியும் சேயே தாயாவாளென

பல முறை பதிவு

 நான் உன்னை காதலிக்கிறேன்

என்று நேரடியாக சொல்லாத போதும், செய்கையில் பல முறை

பதிவு செய்திருப்போம்

உரிமையின் நீட்சி

 நான், எனது என்ற

உரிமையின் நீட்சி ஒவ்வொருவருக்கும்

மாறுமே தவிர நிரந்தரமல்ல

எட்டி பார்க்க தேவை இல்லை

 ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம்

இருக்கிறது, அதில் ஆனந்தம்

அடையுங்கள், அடுத்த உலகை

எட்டி பார்க்க தேவை இல்லை

உன் பிறந்த நாள் தான் எனக்கும் பிறந்த நாள், நீ எனக்காக பிறந்த நாள்

 உன் பிறந்த நாள் தான்

எனக்கும் பிறந்த நாள், நீ 

எனக்காக பிறந்த நாள்

காதலிக்கப்பட்டு கொண்டே இரு

 காதலித்துக்கொண்டே இரு, 

காதலிக்கப்பட்டு கொண்டே இரு

நம்" குடும்பம்

 நீங்கள் "நீ" ஆகி, நீயும் நானும், 

"நாம்' ஆகி, "நாங்கள்" ஆன "நம்"

குடும்பம்

மீண்டும் மீண்டும்

 மீண்டும் மீண்டும் காதல் வரும்

என்று தான் தோன்றுகிறது, 

நீ சிரிக்கும் போது, சிணுங்கும் போது, 

ஓரப்பார்வையில், இப்படி ஒவ்வொரு முறையும் உன்னுடன் காதலில்

மீண்டும் மீண்டும் விழுகின்றேன்

நிகழ்காலம்

 நான் உன்னை காதலிக்கிறேன்", உன் வாழ்வில் எப்போதும் இது " நிகழ்காலம்" 

தலைகணம்

 மேலே உள்ளவனுக்குத் தெரியும்

எப்போது தலைகணம் இறக்குவதென்பது, கீழே உள்ளவனுக்குத் தெரியாது எப்போது தலைகணம் இறங்குமென

உன் நினைவோடு

 நான் சுயநினைவின்றி மருத்துவ

மனையில் இருந்த போதிலும், 

உன் நினைவோடு இருந்ததாக

மருத்துவர் சொல்லி ஆச்சரியப்பட்டார்

செல்லமாக பெரும் முத்தம்

 உன் கொலுசு சத்தம்

கேட்டாலும் திரும்ப மாட்டேன், 

ஒடி வந்து கண் பொத்தும்

சாக்கில், செல்லமாக பெரும்

முத்தம், தலை கோதும்

தீண்டலை இழக்க விரும்பவில்லை


பற்றின்றி பற்று

 பற்றின்றி பற்று

மனங்கள் ?

 பெருநகரங்களில், நகரங்களில் 

வீடுகள் நெருக்கமாக 

இருக்கின்றன, மனங்கள் ? 

பிறர் கனவுகளோடு

 தனக்கென கனவுகளின்றியோ, தன் கனவுகளை

ஒதுக்கிவிட்டோ, பிறர் கனவுகளோடு

பயணிக்கும் பலர்

Sunday, July 18, 2021

More beautiful moon

 முழு நிலவு இன்று

அழகாய் தெரிகிறது, உன்

அழகை இன்று கடன் பெற்றதோ? 

Extra love

 பல அப்பாவிற்கு பெண் பிள்ளைகளுக்கும், பல அம்மாவிற்கும்ஆண் பிள்ளைகளுக்கும் இடையே கூடுதல் மெல்லிய அன்பு இழை ஓடி கொண்டிருக்கும்

சிறுபிள்ளை

 பிள்ளைகள் பெற்றோராகும் போது,பெற்றோர்கள் சிறுபிள்ளையாகிறார்கள், பெற்றோரை உன் பிள்ளை போல் பார்த்துக் கொள், நாளை நீயும் சிறுபிள்ளையாவாய்


One word, 2 word

 உன்னிடம் சொல்ல நினைத்து

இதயத்தில் பூட்டி வைத்த 

ஒரு வார்த்தை "காதல்", 

நீ சொன்ன " எனக்கு கல்யாணம் "

என்ற இரு வார்த்தையில்

இதயம் இரண்டானது, காதல் துண்டானது

(திருமணம்)

 காதல் 

(திருமணம்) 

முடிந்தது

வானம் அருகில்

 தொட்டு விடும் தூரம் தான்

வானம் நீ என் அருகில் இருக்கையில்

அன்பு மழை

 மழையில் ஒரு ☔ குடைப்பிடித்து இருவரும் சென்றாலும், உன் அன்பு

மழையில் நனைந்தேதான் செல்கிறேன்

பிம்பம்

 தவியாய் தவிக்கிறேன் தண்ணீரில்

தெரியும் உன் பிம்பம் 

கலையாமல் இருக்க

Public speaker

 சபையில் சரளமாக பேசும்

நான், உன்னிடம் ஓரிரு

வார்த்தை தான் பேசுகிறேன், 

வார்த்தைகளின்றி தவிக்கிறேன்,  நீ

பேசிக்கொண்டே இருக்கிறாய், நான்

கேட்டு கொண்டே இருக்கிறேன்

Love when

 மொட்டு மலர்ந்தது எப்போது? 

உன் மேல் காதல் 

பிறந்தது எப்போது? 

Friday, July 2, 2021

கவிதையா? காதலா?

 கவிதை வழியாக காதலை

சொல்லிவிட்டேன், பிடிச்சிருக்கு என்றாய், குழம்பிப் போய்

 தவிக்கிறேன், பிடித்தது கவிதையா? 

காதலா? 

கொரோனா


அருகில் சென்றால்,
தள்ளி தள்ளி போகிறாள்,
எனை தவிர்க்க பார்க்கிறாள்,
முகம் பார்த்து பேசாமல்
திரும்பி கொள்கிறாள்,
தவிப்பில் கேட்டேன் ஏன் என்று?
இடைவெளி தேவை கொரோனா காலம் என்றாள்

கேள்வி

 மகள் கேட்கும் ஒவ்வொரு

கேள்விக்கும் பெருமை கொள்கிறேன், 

மகளுக்கு தெரியவில்லை இவள்

கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும், 

கணவன் சிறுமை கொள்வானென

வயதான காலத்தில்

 வயதான காலத்தில் கை 

கோர்த்து, சிரித்துக் கொண்டு

செல்லும் தம்பதிகள் பார்த்து

இழிவாக நகைத்தார்கள்,இந்த

வயதில் தேவையாயென, 

தடுமாறாமல் ஒருவரை ஒருவர்

தாங்கி செல்கின்றனர் என 

அறியவில்லை அவர்கள்

நான்

 குழந்தையான என் விரல்

பிடித்து நடை பழக்கினாள் அம்மா, 

வாலிபத்தில்  கை கோர்த்து

உலா சென்றேன் மனைவியுடன், 

வயோதிகத்தில் தாங்கி பிடித்து

நடக்கின்றேன் என் மகளுடன், 

முதலும் கடைசியும் சார்ந்து

இருக்கிறோம், இடையில் மட்டுமே

தலைதூக்கும் "நான்"


சொல்லாமல்

 இருவரும் உரசி நடக்கிறோம், 

ஏதோ சொல்ல நினைக்கிறோம், 

சொல்லாமல் தவிக்கிறோம், நீ சொல்வாயென நானும், நான்

சொல்வாயென நீயும் எதிர்

பார்த்து ஏதேதோ பேசினோம், 

உனை பற்றி எனை சுற்றி

உள்ளோரிடம் பேசிக்கொண்டே இருக்கிறேன், எனை பற்றி உனை சுற்றி உள்ளோரிடம் பேசிக்கொண்டே இருக்கிறாய், இருந்தும் எதுவும் இல்லாதது போல், அவரவர் வழியில்

சென்று கொண்டு இருக்கிறோம்




Bus stop

 பேருந்து வந்து நின்றது, 

உன் பார்வை நீள்கிறது

எனை தேடி, என் பார்வை நீள்கிறது

உனை தேடி, பார்வைகள்

 சந்தித்ததும் இதயத்தில் இடி

மின்னல், நாணத்தால் நீ இமைகள்

மூட, நான் மட்டும் பார்த்துக்

கொண்டே இருக்கிறேன், பேருந்து

நகர்ந்தது, என் பார்வை 

உன்னுடன் பயணிக்கிறது, 

கண்கள் கலந்தது, 

இதயம் மாறியது, 

பேசுவது எப்போது, 

வாழ்க்கை தொடங்குவது எப்போது? 

Try again

 ஒவ்வொரு முறை வாழ்க்கையில்

தடுமாறும் போது, தூக்கிவிட

ஆட்கள் இருக்காது, நீயாக எழ வேண்டும், அப்போதுதான் அடுத்த முறை பயம் இருக்காது, மீண்டும்

மீண்டும் வீழ்ந்தாலும் எழ

முயற்சி செய், மீண்டு எழுந்தாலும், வீழ்ந்தாலும் முயற்சி

தான் முக்கியம், அது தான்

வாழ்க்கை, அது தான் பயணம்

சகிப்புத்தன்மை

 நான் நானாக, நீ நீயாக, 

அவரவர் அவரவராக இருந்தாலும்

விட்டு கொடுத்தல், சகிப்புத்தன்மை

இல்லா குடும்பம் நாணயத்தின்

இரு பக்கமாக கணவன் மனைவி

இன்றி, "நா" நயம் கெட்டு, உறவுகள் விட்டு போகும்

Opposite house

 உனை பார்த்தேன், உன் நடை செல்லும்

திசை பார்த்தேன், எதிர் வீட்டு புது குடி, 

முகம் பார்த்தேன், எங்கோ பார்த்த நியாபகம், உன் குடும்பம் என் குடும்பம் என வேறுபாடு இன்றி பழகி, இப்போது உன் ஒவ்வொரு செயலும் எனக்கு அத்துப்படி, பின்பு தான் தெரிந்தது என் அப்பாவின்இன்னொரு குடும்பம் என, 

மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறேன்

அண்ணணாக

Window

 சாளரம் வழியே என் காதல் பார்வை உன் இதயம் நுழைந்து உசுப்ப, நீ வீசும் ஓரக்கண்  பார்வை என்னுள்  ஏதோ பண்ண, காதல் மழையில் இருவரும் இணைந்து நனைய, சைகை மொழியில் ஆயிரம் பேசினோம், உனக்குள் உற்சாகம், எனக்குள் கொண்டாட்டம், பொங்கும் இன்பம் அனைத்து தடைகளையும் தாண்டும்

Father

 

அப்பா
ஈன்றெடுக்காத அம்மா, சம்பளம் இல்லா ஆசிரியர், வீட்டிலே ஒரு குரு, பணம் தந்து கொண்டே இருக்கும் அட்சய பாத்திரம்,  என் நம்பிக்கை, என் நட்சத்திரம், எனை தாங்கிய ஊன்றுகோல், எனது தூண்டுகோல்,
அவரால் நான், அவரின் பிள்ளை என்பதில் பெருமை எனக்கு, வாழ்க பல்லாண்டு, வளர்க உம் தொண்டு

Respect

 மரியாதை கலந்த அன்பு

என் அப்பாவிடம் அன்று, 

மரியாதை கலந்த அன்பு

என் பிள்ளையிடம் இன்று, 

எதாவது மரியாதை குறைவாக சொல்லி விடுவான் என்று

Saturday, June 5, 2021

Alai

 உன் பாதம் தொட்டு

செல்லும் அலைகளுக்கு உனைவிட்டு

பிரிய மனமில்லை, அதனால்

மீண்டும் மீண்டும் வந்து

உன் கால்களை தழுவுகின்றன

What u need

 முன்னேற்றம் முன்னேற்றம் என்று

எதை கூறுகிறோம், வானுயர்ந்த

கட்டிடங்களா, வானூர்திகளா, அலைபேசியா, சொந்தங்களை தொலைத்து, உடல் நலத்தை தொலைத்து, எதை சாதிக்க போகிறோம், எதை விட்டு செல்கிறோம்

அடுத்த தலைமுறைக்கு 

Religion

 பிரிவுகள் இல்லா மதமும் இல்லை சாதியும் இல்லை, பிரிவினையை தூண்டி ஒரு மதமோ, சாதியோ உலகை, நாட்டை ஆண்டால் அந்த மதத்தில், சாதியில் இருக்கும் பிரிவுகளில் உயர்ந்தது எது, தாழ்ந்தது எது? 

Dream life

 கற்பனையில் பிடித்த வாழ்க்கை வாழ்ந்து விடு, நினைப்பது போல்

நடப்பதில்லை நிஜத்தில்


Sollatha kadal

 எதேதோ மாற்றங்கள் உள்ளுக்குள், 

கண்ணாலே பரிமாற்றம், புரிதல் இருக்கும் இருவருக்கும், இருந்தும் தொடராமல் முடியும் இந்த 

உணர்வை, பல இதயங்கள் 

கடந்து போகும், நினைவுகள்

மட்டும் வந்து வந்து 

போகும் வாழ்நாள் முழுவதும்

Try

 மீட்டாது வீணையின் நாதம்

கேட்காது, முயலாமல் உன்

திறன் உனக்கு தெரியாது, 

முயற்சித்து பார், சிகரம் 

தொடு, 

Love rain

 எந்த மழையிலும் நனைந்திட

பிடிக்கும், உன்அன்பு 

மழையில் நனைந்திட

அதைவிட பிடிக்கும்

Last

 இறுதி பயணம் கூட

விரைந்து முடிகிறது பெருந்தொற்றால்

Forgot my name

 என் பெயரை பல முறை

சொல்லி பார்த்துக் கொண்டேன்

மறந்துவிடாமல் இருக்க, உன்

பெயர் கேட்ட உடன்

Pandemic relatives

 பெருந்தொற்றா?,  தொலைபேசியில் விசாரிக்கும் சொந்தங்கள், களமாடாத பந்தங்கள், களமாடும் மருத்துவ துறை சிங்கங்களே வாழ்க பல்லாண்டு, வளர்க உங்கள் தொண்டு

Love pandemic

  சொல்லதான்  நினைக்கிறேன், 

சொல்லாமல் தவிக்கிறேன், நெஞ்சு அடைக்கிறது, வரும் மூச்சு

குறைகிறது, பிறகு தான்

தெரிகிறது காதல் அல்ல, பெருந்தொற்றென்று

Answer for all

 பல கேள்விகளுக்கு சில

சந்தர்ப்பங்களில், ஒரே

நேரத்தில் விடை கிடைக்கிறது

Two words

 நீ சொல்லும் இரு

வார்த்தையில் தான் என்

சோர்வு நீங்கும், அந்த

இரு வார்த்தை 'சாப்பிடலாம் வாங்க'

Last journey

 நீ யாரென உன் இறுதி ஊர்வலத்தில் கூடும் கூட்டம் சொல்லும், இப்ப உயிரற்ற உடல்கள் தான் கூட்டமாக செல்கிறது. 


கூட்டம் தவிர், மிச்சம் இருக்கட்டும் மனித இனம்

Clear view in love

 நடந்து சென்றேன், கடந்து சென்றாய், 

மின் வெட்டு பார்வையில் இடியும்

மின்னலும் இரு சேர இறங்கியது, 

மூர்சையானேன், தாங்கி பிடித்தாய், 

கண் திறந்தேன், உன் மடியில்

நான், முழு நிலவாய்  நீ, இப்படியே

காலம் முழுவதும் இருக்க கேட்டேன், 

கணவரிடம் கேட்பதாக சொன்னாய், 

கடைகாரரிடம் தண்ணீர் வாங்கி தெளித்து கொண்டேன், தெளிந்தது


Family

 நான், நீ, நாம் இருவர், 

நமக்கு இருவர், 

இது தான் கூட்டுக் குடும்பம்

இப்போது, 

இனி வரும்

காலங்களில் நான், நீ தான் 

கூட்டுக் குடும்பம்

Poo

 முன்னால் நடந்தாய், பின்னால் தொடர்ந்தேன், தவித்தேன், சொல்ல துடித்தேன், திரும்பி பார்த்தாய், தைரியமாக பூ விழப்போகிறது என்றேன், பூ எப்போதோ விழுந்து விட்டது என்றாய், வண்டுக்கா  சொல்லி தரவேண்டும் பூவை மொய்க்க


Lockdown

 ஊரடங்கு உடலுக்கு தான், 

என் உள்ளம் உன்னை

சுற்றிக் கொண்டே இருக்கிறது

உள்ளத்துக்கு ஊரடங்கேது? 


Love or poem

 கவிதை வழியாக காதலை

சொல்லிவிட்டேன், பிடிச்சிருக்கு என்றாய், குழம்பிப் போய்

 தவிக்கிறேன், பிடித்தது கவிதையா? 

காதலா? 

My parents

 அப்பா அம்மா

சொந்த காலில் நிற்க வேண்டும்

உங்களிடம் கற்றுக் கொண்டோம்

கடின உழைப்பு

உங்களிடம் கற்றுக் கொண்டோம்

சுயமாக முன்னேற வேண்டும்

உங்களிடம் கற்றுக் கொண்டோம்

பிறருக்கு உதவு

உங்களிடம் கற்றுக் கொண்டோம்

உண்மை பேசு

உங்களிடம் கற்றுக் கொண்டோம்

இன்னும் கற்றல் பல

நீங்கள் சொல்லிக் கொடுக்கவில்லை

வாழ்ந்து காட்டுகிறீர்கள்

வாழ்க பல்லாண்டு 


Corona space

 அருகில் இல்லாமல் ஆறு

அடி தூரத்தில் இருந்து

காதல், கொரோனா காதல்

Corona lover


அருகில் சென்றால்,
தள்ளி தள்ளி போகிறாள்,
எனை தவிர்க்க பார்க்கிறாள்,
முகம் பார்த்து பேசாமல்
திரும்பி கொள்கிறாள்,
தவிப்பில் கேட்டேன் ஏன் என்று?
இடைவெளி தேவை கொரோனா காலம் என்றாள்

Daughter questions

 மகள் கேட்கும் ஒவ்வொரு

கேள்விக்கும் பெருமை கொள்கிறேன், 

மகளுக்கு தெரியவில்லை இவள்

கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும், 

கணவன் சிறுமை கொள்வானென

Old age togetherness

 வயதான காலத்தில் கை 

கோர்த்து, சிரித்துக் கொண்டு

செல்லும் தம்பதிகள் பார்த்து

இழிவாக நகைத்தார்கள்,இந்த

வயதில் தேவையாயென, 

தடுமாறாமல் ஒருவரை ஒருவர்

தாங்கி செல்கின்றனர் என 

அறியவில்லை அவர்கள்

Nan

 குழந்தையான என் விரல்

பிடித்து நடை பழக்கினாள் அம்மா, 

வாலிபத்தில்  கை கோர்த்து

உலா சென்றேன் மனைவியுடன், 

வயோதிகத்தில் தாங்கி பிடித்து

நடக்கின்றேன் என் மகளுடன், 

முதலும் கடைசியும் சார்ந்து

இருக்கிறோம், இடையில் மட்டுமே

தலைதூக்கும் "நான்"


Sollatha kathal

 இருவரும் உரசி நடக்கிறோம், 

ஏதோ சொல்ல நினைக்கிறோம், 

சொல்லாமல் தவிக்கிறோம், நீ சொல்வாயென நானும், நான்

சொல்வாயென நீயும் எதிர்

பார்த்து ஏதேதோ பேசினோம், 

உனை பற்றி எனை சுற்றி

உள்ளோரிடம் பேசிக்கொண்டே இருக்கிறேன், எனை பற்றி உனை சுற்றி உள்ளோரிடம் பேசிக்கொண்டே இருக்கிறாய், இருந்தும் எதுவும் இல்லாதது போல், அவரவர் வழியில்

சென்று கொண்டு இருக்கிறோம்


Bus stop

 பேருந்து வந்து நின்றது, 

உன் பார்வை நீள்கிறது

எனை தேடி, என் பார்வை நீள்கிறது

உனை தேடி, பார்வைகள்

 சந்தித்ததும் இதயத்தில் இடி

மின்னல், நாணத்தால் நீ இமைகள்

மூட, நான் மட்டும் பார்த்துக்

கொண்டே இருக்கிறேன், பேருந்து

நகர்ந்தது, என் பார்வை 

உன்னுடன் பயணிக்கிறது, 

கண்கள் கலந்தது, 

இதயம் மாறியது, 

பேசுவது எப்போது, 

வாழ்க்கை தொடங்குவது எப்போது? 

Saturday, April 3, 2021

இலட்சியத்தை அடைய ஓடினால்

 இலட்சியத்தை அடைய ஓடினால்

இலட்சங்கள் தெரிவதில்லை

இலட்சங்கள் அடைய ஓடினால்

இலட்சியங்கள் தெரிவதில்லை

இரண்டையும் சிலர் அடைவர்

இரண்டையும் சிலர் அடைவதில்லை




Interesting

 

உன் சீண்டலும், சிணுங்களும்,
சிரிப்பும்,தீண்டலும் நம்
காதலை சுவாரசியமாக்கி நீட்டுகிறது

நீ தனி மயில்

 நீ தனி மயில்

நான் தனிமையில்

இணைவோம் இளமையில்

வென்றெடுப்போம் முதுமையை


விடுமுறை

 விடுமுறை தினமென்பதால் விடியல்

மாறப்போவது இல்லை, ஆனால்

விரும்பி உழைத்தால் விடியல்

உண்டு நம் வாழ்வில்

Waiting

 நீயாக சொல்வாய் என்று

காத்திருந்தேன், சொல்லிவிட்டாய் 

உனக்கு கல்யாணம் என்று



Relatives


சொந்தங்கள் இருப்பது தொலைவில்,
தொழில்நுட்பத்தால் மிக அருகில்,
இருந்தும் மனம் ஏனோ
நெருங்க மறுத்து, சொந்தங்களை
தொலைவிலேயே வைத்து இருக்கிறது,
"நாம்" என்பதை மறந்து
"நான்" என்பது முன்னிற்பதால்
-அ.அ

Tuesday, March 16, 2021

எல்லாம் கலந்தது

 வாழ்க்கை எல்லாம் கலந்தது

இழந்ததை மறந்து இருப்பதை

நினைத்து வாழ்க்கை நகர்த்துங்கள்

Stand still

 நீ சொல்லும் ஒவ்வொரு

சொல்லிலும் சொக்கிபோய் நிற்கிறேன்

சொல்லின் அர்த்தம் கேட்டால்

மறுபடியும் சொல்ல சொல்கிறேன்

இரண்டு நிமிடங்கள் சொல்லிப்பார்த்து

சிரித்து சென்றாய் நான்

மயங்கி நின்றேன் சலனமற்று

மறக்க நினைக்க

 இளமையில் உனை மறக்க

முயன்றேன் முடியவில்லை

முதுமையில் நினைக்க 

முயன்றேன் முடியவில்லை

நினைவுகளும் நிரந்திரமல்ல

சிவராத்திரி

 உனை காணாமல் ஏங்கி

தூங்காத நாட்கள் எல்லாம்

சிவராத்திரி தான் எனக்கு

சொர்க்கம்

 

சொர்க்கத்தில் இடம் உண்டா
சொர்க்கம் எங்கு இருக்கிறது
உன் மடி மீது
தலை சாய்த்து கண்ணயரும்
வேளையில் நீ முடி
கோதி உச்சி நுகரும்
நொடிகள் சொர்க்கம்

Flower

 தும்பிக்கும்   தேனீக்கும் 

 தெரியவில்லை, நீ 

மலரல்ல என் 

மனைவியென்று, உனை 

சுற்றியே வருகிறது 

எனை போலவே

நாகப்பட்டினம்

 காவிரியில் நீரோடி, கடை

மடை பகுதியில் பயிர்களுக்கு

பாய்ந்தோடி பச்சை பசேல்

என்று இருக்கும்மாம் கிராமம்

எப்போதாவது இப்படி இருக்கிறது

முத்தம்

 தினமும் ஒரு முத்தம்

இயக்கும் எனை நித்தம்

நீயின்றி

 நீரின்றி மீனில்லை

நீயின்றி நானில்லை

குறைகள்

 குறைகலில்லா வாழ்க்கையில்லை, 

குறைகள் எனக்கெதுவுமில்லை, 

குறைகளை குறைகளாய், 

எப்போதும் நினைப்பதில்லை

Sunday, March 7, 2021

One side love

 சொல்லாத காதலும் சுகம் தான்

சுகமான சுமையாய் நெஞ்சில்

Poor rich equal

 பாகுபாடு இல்லை ஏழை

பணக்காரன் அரை குறை

ஆடையுடன் இருவரும்

மனிதம்

 மதம் இனம் சாதி

எதுவும் தேவை இல்லை

"மனிதம்" பிழைத்திருந்தால் நிலைத்திருந்தால்

All are same

 பணம் பேர் புகழ் 

ஒவ்வொருவருக்கும் நீட்சி மாறலாம்

அனைவருக்கும் காட்சிகள் ஒன்றுதான்

பிறப்பு வளர்ச்சி மூப்பு

Waiting


நீ செல்லும் பாதையில்
உள்ள பூக்கள் எல்லாம்
ஒரே திசையில் உன்
வரவுக்காக காத்திருக்கின்றன  மென்மையைக் கற்க எனைப்போலவே

My wife

 வாழ்க்கை எனும் வானத்தில்

சூரியனாய் நீ, சந்திரனாய் 

நான், விண்மீனாய் குழந்தைகள், 

உனை சுற்றியே நாங்கள்

வருகிறோம், உனது உழைப்பால்

எங்கள் வாழ்க்கையில் வெளிச்சம், 

உனது அன்பில் திழைக்கின்றோம், 

உனது அரவணைப்பில் மலைக்கின்றோம், 

குடும்பத்தின் ஆணி வேரே, 

வாழ்க பல்லாண்டு, 

வளர்க உன் தொண்டு

Idealogy in politics

 தினம் ஒரு கட்சி கொடியுடன்

வாக்கு கேட்கிறேன் கொள்கை 

இல்லை வயிற்று பிழைப்புக்காக

Election

 எத்தனை தேர்தல் வந்தாலும்

தோற்பதென்னவோ மக்கள் தான்

Caste for farmer

 சாதிக்கு ஒரு ஒதுக்கீடு

இருக்கும் போது "விவசாயி"

என்று சாதி உருவாக்குவோம்

Listen to wife

 அவள் சொல்வதெல்லாம் கேட்கிறேன்

அவள் சொல்வதெல்லாம் கேட்பதில்லை

முதலாமவர் என் மகள்

இரண்டாமவர் இன்னொருவர் மகள் (மனைவி) 

Corona effect

 கொரனவால் குறைந்து போனது

வெளியே செல்வது மட்டுமல்ல

கொடியில் தொங்கும் சட்டைகளும்

Best marriage life

 காதலும் ஊடலும் கூடலும்

உள்ள இல்வாழ்க்கை தித்திக்கும்

திகட்டாது திரியாது பிரியாது

Your place

 நீ இல்லாத இடத்தில், 

உன் இருப்பை ஒருவர்

உணர்ந்தால், நினைவு கூர்ந்தால், 

நீ இருக்குமிடம் அதுவே 

Saturday, January 30, 2021

காலம்

 சிற்றின்பத்திலே காலம்

 கடந்துவிடுகிறது பேரின்பம்

எது என்று

தெரியாமல் அறியாமல்

முயலாமல் முடிகிறது

வாழ்க்கை பயணம்

Wednesday, January 27, 2021

குழந்தை

 இருபது வரை நாம் குழந்தை

பெற்றோர்கள் சகித்துக் கொண்டார்கள்

அறுபது முதல் பெற்றோர்கள் குழந்தை

நாம் சகித்துக் கொள்வதில்லை

கொரோனா முகமூடி


கொரோனா முகமூடி

முழுவதும் மூடாததால்

அரை நிர்வாணமாய்

மூக்கும் வாயும்