Thursday, December 15, 2022

மீண்டும் மீண்டும்

 மீண்டும் மீண்டும் காதல் வருமா? உன்னை ஒவ்வொரு முறையும் பார்கையில், நினைக்கையில் காதலை புதுப்பித்து கொண்டே இருக்கின்றேன்

Work from home

 முகம் தெரியாமல் பேசி, பழகி, வேலை செய்து, பழமை பேசி, சிரித்து,அனுபவம் பகிர்ந்து, எப்போதாவது காணொளியில் பார்த்து பேசி காலம் கடத்தும் தாத்தா பாட்டி, 

 மற்றும் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள்(work from home) 

நீ நடமாடும் நேரம்

 ஒரு நொடி பொழுது, உன் மடி சாய்ந்து கண் மூடும் வேளையில் ஆயிரம் கவிதைகள் அதுவே வரும், 

உன் இடை பார்த்து, இடை இடையே இடைவெளி விட்டு நடந்தால் கூட,, இடை செல்லும் குளிர் காற்று சுடும், 

நம் இமை மூடி, பார்வை உரசும் வேளையில் மின்னல் வெட்டு நம்மிடையே தோன்றும்


ஓராயிரம் பேர் பார்த்தாலும், ஓராயிரம் விழிகள் தொடர்ந்தாலும், ஒரு நொடியில் நம் விழிகள் சந்தித்து, மறு நொடியில் சங்கமிக்கும்


விரல் ஸ்பரிசம் மின் காந்த அலையாக இதயத்தில் மின்சாரம் பாய்ச்சும், இதயம் என்னவோ தானியங்கி போல் உன் பின்னே ஓடும்


இசையும் தாளமும் நீ நடமாடும் நேரம் 


உருகும் பனி கூட உறைந்தது, அவளுக்காக உருகும் எனை விட அது அதிகம் உருகுவதில்லையென


நான் உன்னை பார்க்கும் போது, உன் இமைகள் பட படக்கும், இதயம்💜❤️ தட தடக்கும், இரண்டும் சேர்ந்து "சிம்பொனி" இசைக்கும் 

வானிலை மையம்

 வானிலை மையம் சொல்கிறது புயல் வரும், மழை வரும், தூரல் வரும், சாரல் வருமென, நான் சொல்கிறேன் நீ வருவாயென, அறிவியலே குழம்பி விடுகிறது உன் வருகையால்

மகிழ்ச்சியை

 நமக்குள்ளே மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டே இருங்கள், மகிழ்ச்சி ஏற்படுத்தும் செயல்களை செய்து கொண்டே இருங்கள், அந்த மகிழ்ச்சிக்கு தான் இத்தனை போராட்டமும்

கலசம்பாடி தாத்தா வீடு



காவிரியின் கடைமடை, அழகிய வயல்வெளி, தாழ் வாரமும் முற்றமும், அறைகள் நிறைந்த பெரிய ஓட்டு வீடு, அதில் ஊஞ்சல், பத்தாயம், நெல் கோட்டை, வாசலில் திண்ணை, பத்து அடி ஓடி குதித்தால் பெரிய குளம், குளக்கரையில் தென்னையும், பூசனை, கிளி மரம், குளத்தில் சாய்ந்து ஆடும் மாமரம், நாங்கள் ஏறி குளத்தில் குதிக்க மகிழ்ச்சியாக இடம் கொடுத்து பழம் கொடுக்கும், வீட்டின் முன்புறம் பூ தோட்டம், வலது புறம் ஒரு வீடு, வீட்டில் நம் நண்பர்கள், வீட்டை தாண்டி வாய்க்கால், வாய்க்கால் வந்து சேரும் குளம், குளத்தில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால், வாய்க்கால் தாண்டி வயல், வாய்க்கால் ஓரம் பனை மரம், சிறிது தூரத்தில் ஒன்றிரண்டு ஈச்ச மரம், வீட்டின் பின்புறம் வாழை, கீரை, எலுமிச்சை, பெரிய புளிய மரம், 

பின்னால் இருக்கும் அடுப்பறையில் சமையல், நொங்கும், இளநீர் வெட்டி குடிப்பது, மாவு அரைக்க குடக்கல், அம்மி, பின்புறம் வயல்வெளி, அதை தாண்டி வாய்க்கால், வாய்க்கால் இருபுறமும் பனை, மூங்கில் குத்து, வாய்க்கால் தாண்டி பெரிய வயல்வெளி, வீட்டின் இடபுறம் வண்டி கொட்டகை, பாரவண்டி, கூண்டு வண்டி நிற்கும் அங்கே, அதனருகே எருமை மாடு கட்டி அசை போடும், அதன் பின்னே சாணம் குழி அது இறங்கும் வரப்பில், எருமை தாண்டி மாட்டு கொட்டில், அதை தாண்டி வைக்கல் போர், அதை சுற்றி மரங்கள், மாடுகள் இளைப்பாறிய இடமே, இரண்டு வண்டி சோடு  பாதை போகும், இரண்டும் சேர்ந்து ரோடு போகும், குளத்தின் பக்கத்தில் பெருமாள் கோயில், அதனருகே குலதெய்வம், அதனருகே களம், அதை தொடர்ந்து வீதிகள் மற்றும் நம் சொந்த பந்த  நட்பு களின் வீடுகள், மரங்கள் செடிகள், கொடிகள், கரி கோடு, பிள்ளையார் பந்து, கிட்டிபுல்,பனை வண்டி, பனை காத்தாடி, சில்லு விளையாட்டு, ஈச்சம் பழம், நொங்கு, பதனி, இளநீர் தின்பண்டங்கள், வயல் செல்ல பார வண்டி, ஊர் செல்ல கூண்டு வண்டி, மாட்டு வண்டி ஓட்ட சண்டை நடக்கும், மாட்டுக்கு புண்ணாக்கு, ஆட்டுக்கு கருவக்காய்  கொடுத்து அதன் மனதில் இடம் பிடிப்போம், புண்ணாக்கு திருடன் தேடி மாமா அலைவர், குளத்தில் குதித்தால் நேரம் தெரியாது, ஆற்றில் ஆட நேரம் போதாது, களைத்து போய் கயிற்று கட்டிலில் நாங்கள் தூங்க, காலை நேரம் பொழுது விடிந்து சூரியன் தெரியும் குளத்தில்

பட படக்கும்

 எனை பார்த்து பட படக்கும் உன் இமையின் தாக்கம் என் இதயத்தில், இதயம் பட படக்கும், துடிப்பு தட தடக்கும்,  இரத்த ஓட்டத்தை சீராக்க உன் பார்வை தவிர்க்கிறேன, தவிர்க்க முடியாது தவிக்கிறேன்

புல்லாங்குழலின்

 புல்லாங்குழலின் மெல்லிய இசை காதில் விழ, இசை வந்த திசை பார்க்கிறேன் நீ தான் பேசிக் கொண்டு இருக்கிறாய்

ஒரு வார்த்தை

 ஒரு வார்த்தை கவிதை உன் பெயர், 

இரு வார்த்தை கவிதை உன் பெயர்க்கு பின்னால் சேர்ந்து என் பெயர்

நட்சத்திரம்

 வான வீதியில் நடை போடும் நட்சத்திரம் ஒன்று மொட்டை மாடியில் நடைபோடுதோ என்று பார்த்தால், அட என்னவளே நீயா அது