Saturday, September 10, 2022

முயற்சி எதற்கு, பயிற்சி எதற்கு?

 அவரவர் விதிப்படி தான் அனைத்தும் நடக்கின்றது என்றால் முயற்சி எதற்கு, பயிற்சி எதற்கு? ஆனால் அதுவும் விதி தான் 

அக இன்பம்

 அனைவருக்கும் அத்தனை புற இன்பத்தையும் அனுபவிக்க ஆசை, 

அக இன்பம் அதைவிட மேலானது என தெரியும் வரை, ஆனால் அக இன்பம் சிலருக்குத் தான் கிட்டும்

வெற்றியும் அழகு

 தினமும் பூக்கும் புது மலர்கள் போல் உன் புன்னகை,  என் முகம் மலர்கிறது பூவாய், இதழ் பிரித்து நீ பேச, மெய் மறந்து நிற்கின்றேன், என் பெயர் அவ்வளவு அழகா? நீ உச்சரிக்கையில் தெரிகிறது, விழி மோதி விபத்து, என் இதயத்தில் நீ விழுந்தாய், விழுந்தது நீ, உன் காதலில் வீழ்ந்தது நான், தோற்பதும் அழகு உன்னிடத்தில், வெற்றியும் அழகு உன் காதலை பெற்று

அப்பனுக்கு வேலை

 மழலையாய் நீ பேசும் அர்த்தம் இல்லாத வார்த்தைக்கு, அர்த்தம் சொல்லி சிரிப்பது தான் இந்த அப்பனுக்கு வேலை

தீர்ப்பு

 மனைவியிடம் சண்டையிட்டு மகளிடம் முறையிடுகிறேன், தீர்ப்பு மனைவிக்கு சாதகம் என்றாலும் அடிபணிந்து ஏற்கின்றேன்

அதிகாரம்

 அத்தனை அதிகாரம் செய்கின்றேன் அம்மாவை, அக்காவை, மனைவியை, காரம் குறைந்து விடுகிறது மகளிடம்

சொர்க்கம்

 குழந்தையாய் தாயின் மடியில், பெரியவனாக மனைவியின் மடியில், முதுமையில் மகளின் மடியில் மடிந்தால்   மண்ணுலகமே சொர்க்கம் ஆண்களுக்கு

மீண்டும் மீண்டும் காதல் வருமா?

 மீண்டும் மீண்டும் காதல் வருமா? உன்னை ஒவ்வொரு முறையும் பார்கையில், நினைக்கையில் காதலை புதுப்பித்து கொண்டே இருக்கின்றேன்

மழைநீர் சேமிப்போம்

 மேகத்திற்கு தெரியுமா மழையாய் பெய்வோமென, நீர் திவிலைக்கு தெரியுமா தரையில் தலை தெறிக்க விழுவோமென, விழுந்த நீர்த்துளிக்கு தெரியுமா சேர்ந்து காடு மேடு எல்லாம் ஒடுவோம் என்பது, நீருக்கு தெரியுமா கடலை அடைவோமென, நமக்கு தெரியும் எப்படி நீர் தேக்குவதென, சேமிப்பதென, மழைநீர் சேமிப்போம், மண் வளம் காப்போம்

மாசு காற்றோடு நான்


ஏக்கர் கணக்கு நிலத்தில் இயற்கை காற்றோடு வாழ்ந்தார் தாத்தா, கிரவுண்ட் கணக்கு நிலத்தில் மின் விசிறியோடு வாழ்ந்தார் அப்பா,
கால் கிரவுண்ட்  நிலத்தில் மின் குளிரூட்டியோடு மாசு காற்றோடு நான்,
அடுத்த சந்ததிகள்?

அறிய முடியுமா?

 உச்சத்தை அடைந்து பரபரவென வாழும் வாழ்க்கையா? கிடைத்தது கொண்டு, பிடித்ததை செய்து வாழும் வாழ்க்கையா? பிடித்தது எல்லாம் கிடைக்குமா? கிடைத்தது எல்லாம் பிடிக்குமா? நினைத்தது எல்லாம் நடக்குமா? நடப்பதை எல்லாம் முன்பே அறிய முடியுமா? 

தனிமையை குறைத்து, தனித்தன்மையை கூட்டுவோம்

 தனியாக பிறக்கின்றோம், தனியாக இறக்கின்றோம், இடையே உறவுகளுடன் உறவாடி களிக்கின்றோம், தனிமை சிலருக்கு பிடிக்கிறது, சிலருக்கு திணிக்க படுகிறது, தனிமை வெறுமையை ஏற்றி விபரீத எண்ணங்களை கூட்டும், தனிமையை குறைத்து, தனித்தன்மையை கூட்டுவோம்

வாழ்க்கை எனும் நாடக மேடை

 வாழ்க்கை எனும் நாடக மேடையில் நம் கதாபாத்திரத்தில் நடித்து முடித்து செல்வோம், கதாநாயகனாக இருக்கலாம், கடைநிலை ஊழியனாய் இருக்கலாம், துண்டாக, செருப்பாக எதுவாயினும் அதுவே நாம்

பறக்கலாம்

 அந்தி சாயும் நேரம், கீழ்வானம் சிவக்க, பறவைகள் தங்கள் கூடு நோக்கி பறக்க, மெல்லிய காற்றில் நான் உன்னை காதலிக்கிறேன் என்று நான் சொல்ல கேட்டு உன் கன்னம் வெட்கத்தில் கீழ்வானைவிட மேலும் சிவக்கிறது, ஆம் என்று சொல்லி, வா பறக்கலாம் நம் காதல் வானில்

மகிழ்ச்சி

 எவரெஸ்டில் ஏறிதான் மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்பதில்லை, வீட்டில் நாற்காலியில் ஏறி கூட மகிழ்ச்சி கொள்ளலாம்

சில காலம்

 மனதால் பேசியது சில காலம், 

மௌனத்தில் பேசியது சில காலம், 

சைகையால் பேசியது சில காலம்,

வாயால் பேசியது சில காலம், 

பேசாமல் இருப்பதே நல்ல காலம்

தாய் மொழி, நம் தமிழ் மொழி

 

தாய் மொழி, நம் தமிழ் மொழி
இதை விட மூப்பு எதுவும் இல்லை,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
இதை விட இளமை எதுவும் இல்லை,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
இதை விட அழகு எதுவும் இல்லை,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
இதை விட இலக்கணம் எதுக்கும் இல்லை,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
பழமையும் புதுமையும் கலந்த மொழி,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
உலகெங்கும் ஆண்ட உயர்ந்த மொழி,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
பல புதுமைகள் அறிவியல் புகுத்தி காத்திடுவோம்,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
அதை அனைவரும் கற்றுக்  வளர்திடுவோம்,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
அதை உலகின் உச்சியில் நிறுத்திடுவோம்,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
தாய் மொழி, நம் தமிழ் மொழி

ஒரு பொழுது சிரிக்கிறாய்

 ஒரு பொழுது சிரிக்கிறாய், 

ஒரு பொழுது இரசிக்கிறாய், 

ஒரு பொழுது தவிர்க்கிறாய், 

ஒரு பொழுது தவிக்கிறாய், 

புரியாத புதிராக இருக்கிறாய், 

எதுவாயினும் சொல்லி விடு, 

மனதார ஏற்றுக் கொள்கிறேன்

சொல்லி மறுத்த காதல்

 சொல்லி மறுத்த காதல், 

சொல்லாமல் மறைத்த காதல், 

மனதோடு மறைத்த காதல், 

காதலித்து பிரிந்த காதல், 

கல்யாணத்தில் முடிந்த காதல், 

எந்த காதலிலும் "காதல்" ஒன்று தான்

ஏதோ "ஒன்று"

 ஏதோ "ஒன்று" பிடித்தாலே காதலிக்கிறோம்,  ஏதோ "ஒன்று" பிடிக்காமல் திருமணத்தை முறிக்கிறோம், 

எதுவாயினும் "ஒன்றாய்" இருக்க வேண்டும் என்பது போய், "ஒற்றை "

விசயத்தில் இரண்டாய் பிரிகிறோம்

காதலா

 கைகள் உரசி நடப்பதும், பேனா வாங்கி கொடுப்பதும், கடலை மிட்டாயை காக்கா கடி கடிப்பதும், எது பேசினாலும் சிரிப்பதும், ஓரமாக பார்த்து இரசிப்பதும் பள்ளி பருவத்தில் காதலாக தெரியும், சிலருக்கு அது உண்மையானது, சிலருக்கு பொய்யானது

முதல் கோணலே


மக்கள் மன்றங்களுக்கு, சட்ட மன்றம், பாராளுமன்றத்திற்கு சரியான நபரை தேர்ந்தெடுக்கும் தகுதியை மக்களாகிய நாம் வளர்த்து கொள்ள வேண்டும்,  முதல் கோணலே முழுவதும் கோணலாகிறது

நிகழ்வு

 சிலருக்கு கனவு, சிலருக்கு அது நிகழ்வு, உங்கள் கனவு நிகழ்வாக மாறினால் அது உன் வெற்றியை குறிக்கும்


உணர்வு இரண்டு

 பிச்சை போடுபவரும், வாங்கியவரும் ஒரே உணவு விடுதியில் உணவு வாங்கி உண்டனர், உணவு ஒன்று, உணர்வு இரண்டு

வேலை

 புகழ் மிக்க அலுவலகத்தில் வேலை செய்வதாக கடை நிலை ஊழியர், மேலாளர், செயல் அதிகாரி அவரவர் வீட்டில் சொல்லி கர்வம் கொண்டனர்

(ஸ்வர்ண)லஷ்மி சீனிவாசன்


(ஸ்வர்ண)லஷ்மியை பிடிக்காத சீனிவாசன் உண்டோ? பார்த்த முதல் நாளே, (ஸ்வர்ண)லஷ்மியை மனதில் ஏந்தி மானசீக காதலை மனதில் வைத்து, பெற்றோரும் மற்றோரும் வாழ்த்தி நிச்சயிக்கும் நன்னாளில்,
மங்கல வாத்தியம் முழங்க, எல்லாரும் மனதார வாழ்த்த , வரும் மணநாளில்
(ஸ்வர்ண)லஷ்மியை கரம் பிடித்து, பதினாறும் பெற்று பெரும் வாழ்வு வாழ வாழ்த்துக்கிறோம் பள்ளி நண்பர்கள்