Thursday, July 13, 2023

வாழ்க்கை அப்படி தான்

 இமயம் தொட நினைப்போம் சில சமயம், இதயம் வெடிப்பது போல் சில நேரம், சலனம் இல்லாமல் சில சமயம், கொந்தளிப்பாய் சில நேரம், வாழ்க்கை அப்படி தான், வாழ்ந்து தான் பார்போமே, வெற்றி கிட்ட வாய்ப்பு வரும் வரை

கல்யாண நாள்

 அனுதினமும் கொண்டாடு காதலை, அனுதினமும் கொண்டாடு காதலியை, மாறாத காதல், தீராத காதல் என்றும், இன்று கொண்டாட இன்னும் ஒரு தருணம், காதலி மனைவியாய் மாறலாம், ஆனால் அவள் மீது கொண்ட காதல் மாறாது எந்நாளும், அணு அணுவாய் கொண்டாடிட வேண்டும்,அன்பு மற்றும் காதலுடன்

உனது முகவரி

 உனது முகவரி நமது முகவரியாவது எப்போது எனக் கேட்டேன், முதல் சந்திப்பில் மாறியதாக நீ கூறினாய்


மழைநீர் அங்கங்கே தேங்கி நிற்க, நீ தாவி தாவி செல்லும் அழகை பார்த்து, மான்கள் எல்லாம் வரிசையில், உன்னிடம் கற்றுக் கொள்ள, என் மனமும் உன்னுடனே தாவி வந்து உன் வீட்டில் நிற்கிறது, என் வழி மறந்து


உன் பார்வை படும் போதெல்லாம் என்னுள் மின்னல், பூகம்பம், நீயோ சலனமின்றி கடந்து செல்கிறாய்,  அறிவியலுக்கு அப்பாற்பட்ட அற்புதம் ஒரே இடத்தில்

Sunday, July 9, 2023

ஒரு வழி பாதையில்

 ஒரு வழி பாதையில் ஒன்றன் பின் ஒன்றாக சென்ற இருமனம் முற்கால திருமணம், சிறிய இடைவெளியில் இணைந்து செல்லும் தண்டவாளம் போல் பிற்கால திருமணம், இரு பக்கங்களிலும் ஒட்டுநர் இருக்கும் மின்சார இரயில் போல் தற்கால திருமணம்

எல்லா பிறவி

 எல்லா பிறவியிலும் உன் காதலில் மூழ்கி திளைக்க வரம் கேட்டேன், காதலித்து கல்யாணம் செய்து கொண்டு பல வருடங்கள் கழிந்தும் வரம் கேட்கும் முதல் ஆள் என உடனே என் முன் தோன்றி வரம் கேட்டது சரியா என உறுதி செய்ய சொன்னார், கலிகாலம் 

கொலுசு சத்தம்

 நீ எங்கு சென்றாலும், உன்னை தொடரும் உன் கொலுசு சத்தம், என் மனதும்

கவலை

 கவலை படாமல் இருப்பது எப்படி என்று கவலை படுவதே கவலையாக உள்ள கவலை

பழைய நினைவு

  பழைய நினைவுகளுடனே காலம் கரைகிறது வயோதிகம், புதிய தலைமுறையுடன் போட்டி போடவும் முடியவில்லை, புரிந்து கொள்ளவும் முடியவில்லை, இருந்தும் நம் இருப்பை காட்டிக் கொண்டு இருக்க வேண்டி உள்ளது, இல்லையெனில் இந்த சமூகமும், சொந்தங்களும் மறந்து விடுகின்றனர், தனித்து இருக்கிறேன், தனிமையில் இருக்கிறேன், நினைவுகளை அசை போட்ட படி,  காலனை வெல்வது எளிது, காலம் கடத்துவது பெரிதாக உள்ளது

ஐம்பதாயிரம் கோடி

 

ஐம்பதாயிரம் கோடியாவது வேண்டும் என்று நினைத்து இருந்தேன், பின்பு ஐயாயிரம் கோடியாகவும், பின்னர் ஐந்து கோடியாவது வேண்டும் என நினைத்து இருந்தேன், ஐந்து ரூபாய்க்கு பஞ்சு மிட்டாய் வாங்கும் வரை, பின்பு புரிந்தது மகிழ்ச்சி பணத்தில் இல்லை மனதில் என

கோலமிட்டு

 ஆவலுடன் வாசல் நோக்கி காத்திருந்தேன், பாட்டி வந்து வாசல் தெளித்து கோலமிட்டு சென்றது

பிறை நிலா

 பிறை நிலா, முழு நிலா என காதலிக்கும் போது வர்ணித்தேன், அரை நரை வந்த போதும் அதே அழகுடன் தெரிந்தாய் நீ, முழு நரை வந்த பின்பும் அதே அழகு, காதலுக்கு எப்பவுமே கண்ணுமில்லை, வயதுமில்லை

எடுத்துக்காட்டு

 எல்லா நல்லவைகளுக்கும் எடுத்துக் காட்டு எங்களுடன், எங்கள் அப்பா

பெற்றோருக்கு பெற்றோர்

 அம்மா செய்யும் தியாகத்திற்கு ஈடு இணை அப்பா செய்யும் தியாகம், அதை  கொஞ்சமாக நெருங்கி செய்ய வயதான காலத்தில் பெற்றோரை தாங்கும் பிள்ளைகள் உள்ளனர், பெற்றோர்கள் பிள்ளைகள் ஆக, பிள்ளைகள் பெற்றோருக்கு பெற்றோர் ஆகிறார்கள்

சமத்துவம்

 சமத்துவம் என்பது எல்லாவற்றிலும் ஐம்பது, ஐம்பது விழுக்காடு அல்ல, தெரிந்தவைகளில் அதிக பங்களிப்பும், தெரியாதவற்றில் குறைந்த பங்களிப்பும் தருவது, தெரியாதவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்குவது

பாதையில் மலராய்

 அனைவரும் நினைப்பது அடுத்தவர் பாதையில் மலராய் இருக்கும் என, முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும், முட்களை புறந்தள்ளி முன்னால் செல்பவனுக்கு வாழ்க்கை  வசப்படும்

Wednesday, March 8, 2023

வானமே எல்லையாக

 வானமே எல்லையாக சிறகடித்து பறந்தோம் காதல் வானில், உலகமே என் கையில் உனை கரம் பிடித்த நாளில், ஒரு உலகம் மூவுலகமானது உன்னால், ஈரேழு உலகங்களை வெல்லலாம் அதனால்

ஏங்குமம்மா

 

நான் முந்தி, நீ முந்தி யார் முந்தி சென்றாலும் , ஒரு உயிர் தான் ஏங்குமம்மா, இரு உயிரும் போனது போல் ஆனதம்மா

பிரிவதில்லையே

 உன்னை பிரிந்து இருக்கும் நொடிகளை சேர்த்து என் ஆயுளை கூட்ட கேட்டேன், அதை உன்னுடன் செலவிடலாமென, இறைவனோ உன் உள்ளம் தான் அவளை ஒரு நொடியும் பிரிவதில்லையே என கூறி மறுத்து விட்டார்

சேர்ந்து எழுவோம்

 ஒவ்வொரு முறை சோர்ந்து விழும் போதெல்லாம், சேர்ந்து எழுவோம் என்ற நம்பிக்கையில் தான் தம்பதிகள் மண வாழ்க்கை நகர்த்துகின்றனர்

வசைபாடினால்

 நாயே, கழுதையே, மாடே என்று யாரும் வசைபாடினால், இசை பாடலாக கேளுங்கள், இவை யாவும் உபயோகமானது தான்

நினைவு

 

சமகால நிகழ்வுகளை நினைவு கூற, நண்பர்கள் வேண்டும், வயோதிகத்தில் ஒவ்வொருவராக சிவலோக பதவி அடைய தனிமை கூடும், தன் நினைவே இல்லாத போது எது வேண்டும்

ஆண்டவர்கள் எல்லாம் மாண்டவர்கள்தான், ஆயிரம் நிகழ்வுகள் நிகழ்த்தினாலும் முதுமையில் நினைவின்றி போனவர்கள் தான், இளமையில், முதுமையில் அனைத்தும் நினைவில் இல்லை, இடையே இருக்கும் சில காலம் நல்ல செயல்கள் செய்து நினைவில் நிறுத்திடுவோம்

தனிக்குடுத்தனம்

 பிள்ளைகள் வளர்த்து, படித்து, வேலைக்கு சென்று, திருமணம் செய்து கொண்ட பின் பெற்றோர்களை அனுப்பி வைத்தனர்  தனிக்குடுத்தனம்

தடுமாறும் வயோதிகம்

 உலகம் சுருங்கி, உறவுகள் சுருங்கி, ஒன்று விட்ட சொந்தம் எல்லாம் சுருங்கி, ஒரு குழந்தை என்றான போது, ஒற்றை கொம்பை நம்பி, கிளைகள் பற்ற இன்றி தடுமாறும் வயோதிகம்

கல்யாண நாள்

 அனுதினமும் கொண்டாடு காதலை, 

அணு அணுவாய் கொண்டாடிட வேண்டும், 

அனுதினமும் கொண்டாடு காதலியை, 

அன்பு மற்றும் காதலுடன், 

மாறாத காதல், தீராத காதல் என்றும், 

ஊடல் மற்றும் கூடலுடன், 

இன்று கொண்டாட இன்னும் ஒரு தருணம்


Tuesday, March 7, 2023

திண்டாடி திரிகிறார்

  காதலர் தினத்தை அன்று  கொண்டாடி தீர்த்த அப்பா, இன்று கொண்டாடி தீர்க்கும் மகளைப் பார்த்து திண்டாடி திரிகிறார் 

வண்ண மயமாக்கலாமே

 என் கனவுகளை வண்ண மயமாக்கியது நீயே, ஹோலியில் காதலை ஏற்று வாழ்க்கையை வண்ண மயமாக்கலாமே

வெற்றி உன்னை உலகுக்கு சொல்லும்

 சிங்க பெண்ணே, சீறும் வேங்கையே, தாக்க வருவோரை தாக்கி நசுக்கி, காக்க வருவோரை அரவணைத்து, போக பொருளாய் பார்ப்போரை புறம் தள்ளி, உன் திறமையால் சிகரம் தொடு, உன் வெற்றி உன்னை உலகுக்கு சொல்லும்

வெளிச்சம் நம் வாழ்வில்

 வண்டி நகர, அலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தோம், ஊரும் வந்தது, இரவும் முடிந்தது, வெளிச்சம் வந்தது நம் வாழ்வில்

என்மனம் பின் தொடரும்

 விழாவை சிறப்பித்து, ஓரக்கண்ணில் எனைப்பார்த்து, அலைபேசி எண்ணை தந்து தொடர்வண்டி ஏறினாய், 

வண்டி முன்னே செல்ல, 

என்மனம் பின் தொடரும்

அங்கே கலந்தது இருமனம்

 குழந்தையை தேடும் சாக்கில் 

உன்னை தேடுகிறேன், அத்தையை தேடுகிறீர்களா மாமா என்று 

அழைத்து சென்றது உன்னிடம், 

அங்கே  கலந்தது இருமனம்

துள்ளி ஓடியது நீ

 பட்டும்   படாமலும், தொட்டும் தொடாமலும், என் கையில் 

இருந்து வாங்கி, முத்தம் 

தருகிறாய் குழந்தைக்கு, இம்முறை வெட்கப்பட்டது நான், துள்ளி 

ஓடியது நீ

சேர்த்து வைக்கும் மழழை

 தாவி வந்த குழந்தை

 முத்தம் தந்தது, மாமா 

என்றது என்னை, அத்தை 

என்றது உன்னை, வெட்கப்பட்டது

 நீ,  வெற்றி பெற்றது 

நான், நம்மை சேர்த்து 

வைக்கும் மழழை

வெட்கப்பட்டது

 முத்தம் தா என்றேன், 

வெட்கப்பட்டது நீ, தாவி 

வந்து தந்தது உன் 

கையில் இருந்த குழந்தை

தரிசனம்

 அதிகாலையில் உன் தரிசனம் வேண்டி, உன் வீதியில் அங்குமிங்கும் நடை போட்டதில், உன்னை பார்த்தேனோ இல்லையோ, என் தேக ஆரோக்கியம் கூடியது