வானமே எல்லையாக சிறகடித்து பறந்தோம் காதல் வானில், உலகமே என் கையில் உனை கரம் பிடித்த நாளில், ஒரு உலகம் மூவுலகமானது உன்னால், ஈரேழு உலகங்களை வெல்லலாம் அதனால்
Full of tamil poems - kavithaigal- kaadhal,social awareness, social information
Wednesday, March 8, 2023
ஏங்குமம்மா
நான் முந்தி, நீ முந்தி யார் முந்தி சென்றாலும் , ஒரு உயிர் தான் ஏங்குமம்மா, இரு உயிரும் போனது போல் ஆனதம்மா
பிரிவதில்லையே
உன்னை பிரிந்து இருக்கும் நொடிகளை சேர்த்து என் ஆயுளை கூட்ட கேட்டேன், அதை உன்னுடன் செலவிடலாமென, இறைவனோ உன் உள்ளம் தான் அவளை ஒரு நொடியும் பிரிவதில்லையே என கூறி மறுத்து விட்டார்
சேர்ந்து எழுவோம்
ஒவ்வொரு முறை சோர்ந்து விழும் போதெல்லாம், சேர்ந்து எழுவோம் என்ற நம்பிக்கையில் தான் தம்பதிகள் மண வாழ்க்கை நகர்த்துகின்றனர்
வசைபாடினால்
நாயே, கழுதையே, மாடே என்று யாரும் வசைபாடினால், இசை பாடலாக கேளுங்கள், இவை யாவும் உபயோகமானது தான்
நினைவு
சமகால நிகழ்வுகளை நினைவு கூற, நண்பர்கள் வேண்டும், வயோதிகத்தில் ஒவ்வொருவராக சிவலோக பதவி அடைய தனிமை கூடும், தன் நினைவே இல்லாத போது எது வேண்டும்
ஆண்டவர்கள் எல்லாம் மாண்டவர்கள்தான், ஆயிரம் நிகழ்வுகள் நிகழ்த்தினாலும் முதுமையில் நினைவின்றி போனவர்கள் தான், இளமையில், முதுமையில் அனைத்தும் நினைவில் இல்லை, இடையே இருக்கும் சில காலம் நல்ல செயல்கள் செய்து நினைவில் நிறுத்திடுவோம்
தனிக்குடுத்தனம்
பிள்ளைகள் வளர்த்து, படித்து, வேலைக்கு சென்று, திருமணம் செய்து கொண்ட பின் பெற்றோர்களை அனுப்பி வைத்தனர் தனிக்குடுத்தனம்
தடுமாறும் வயோதிகம்
உலகம் சுருங்கி, உறவுகள் சுருங்கி, ஒன்று விட்ட சொந்தம் எல்லாம் சுருங்கி, ஒரு குழந்தை என்றான போது, ஒற்றை கொம்பை நம்பி, கிளைகள் பற்ற இன்றி தடுமாறும் வயோதிகம்
கல்யாண நாள்
அனுதினமும் கொண்டாடு காதலை,
அணு அணுவாய் கொண்டாடிட வேண்டும்,
அனுதினமும் கொண்டாடு காதலியை,
அன்பு மற்றும் காதலுடன்,
மாறாத காதல், தீராத காதல் என்றும்,
ஊடல் மற்றும் கூடலுடன்,
இன்று கொண்டாட இன்னும் ஒரு தருணம்
Tuesday, March 7, 2023
திண்டாடி திரிகிறார்
காதலர் தினத்தை அன்று கொண்டாடி தீர்த்த அப்பா, இன்று கொண்டாடி தீர்க்கும் மகளைப் பார்த்து திண்டாடி திரிகிறார்
வண்ண மயமாக்கலாமே
என் கனவுகளை வண்ண மயமாக்கியது நீயே, ஹோலியில் காதலை ஏற்று வாழ்க்கையை வண்ண மயமாக்கலாமே
வெற்றி உன்னை உலகுக்கு சொல்லும்
சிங்க பெண்ணே, சீறும் வேங்கையே, தாக்க வருவோரை தாக்கி நசுக்கி, காக்க வருவோரை அரவணைத்து, போக பொருளாய் பார்ப்போரை புறம் தள்ளி, உன் திறமையால் சிகரம் தொடு, உன் வெற்றி உன்னை உலகுக்கு சொல்லும்
வெளிச்சம் நம் வாழ்வில்
வண்டி நகர, அலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தோம், ஊரும் வந்தது, இரவும் முடிந்தது, வெளிச்சம் வந்தது நம் வாழ்வில்
என்மனம் பின் தொடரும்
விழாவை சிறப்பித்து, ஓரக்கண்ணில் எனைப்பார்த்து, அலைபேசி எண்ணை தந்து தொடர்வண்டி ஏறினாய்,
வண்டி முன்னே செல்ல,
என்மனம் பின் தொடரும்
அங்கே கலந்தது இருமனம்
குழந்தையை தேடும் சாக்கில்
உன்னை தேடுகிறேன், அத்தையை தேடுகிறீர்களா மாமா என்று
அழைத்து சென்றது உன்னிடம்,
அங்கே கலந்தது இருமனம்
துள்ளி ஓடியது நீ
பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும், என் கையில்
இருந்து வாங்கி, முத்தம்
தருகிறாய் குழந்தைக்கு, இம்முறை வெட்கப்பட்டது நான், துள்ளி
ஓடியது நீ
சேர்த்து வைக்கும் மழழை
தாவி வந்த குழந்தை
முத்தம் தந்தது, மாமா
என்றது என்னை, அத்தை
என்றது உன்னை, வெட்கப்பட்டது
நீ, வெற்றி பெற்றது
நான், நம்மை சேர்த்து
வைக்கும் மழழை
தரிசனம்
அதிகாலையில் உன் தரிசனம் வேண்டி, உன் வீதியில் அங்குமிங்கும் நடை போட்டதில், உன்னை பார்த்தேனோ இல்லையோ, என் தேக ஆரோக்கியம் கூடியது