இமயம் தொட நினைப்போம் சில சமயம், இதயம் வெடிப்பது போல் சில நேரம், சலனம் இல்லாமல் சில சமயம், கொந்தளிப்பாய் சில நேரம், வாழ்க்கை அப்படி தான், வாழ்ந்து தான் பார்போமே, வெற்றி கிட்ட வாய்ப்பு வரும் வரை
Full of tamil poems - kavithaigal- kaadhal,social awareness, social information
Thursday, July 13, 2023
கல்யாண நாள்
அனுதினமும் கொண்டாடு காதலை, அனுதினமும் கொண்டாடு காதலியை, மாறாத காதல், தீராத காதல் என்றும், இன்று கொண்டாட இன்னும் ஒரு தருணம், காதலி மனைவியாய் மாறலாம், ஆனால் அவள் மீது கொண்ட காதல் மாறாது எந்நாளும், அணு அணுவாய் கொண்டாடிட வேண்டும்,அன்பு மற்றும் காதலுடன்
உனது முகவரி
உனது முகவரி நமது முகவரியாவது எப்போது எனக் கேட்டேன், முதல் சந்திப்பில் மாறியதாக நீ கூறினாய்
மழைநீர் அங்கங்கே தேங்கி நிற்க, நீ தாவி தாவி செல்லும் அழகை பார்த்து, மான்கள் எல்லாம் வரிசையில், உன்னிடம் கற்றுக் கொள்ள, என் மனமும் உன்னுடனே தாவி வந்து உன் வீட்டில் நிற்கிறது, என் வழி மறந்து
உன் பார்வை படும் போதெல்லாம் என்னுள் மின்னல், பூகம்பம், நீயோ சலனமின்றி கடந்து செல்கிறாய், அறிவியலுக்கு அப்பாற்பட்ட அற்புதம் ஒரே இடத்தில்
Sunday, July 9, 2023
ஒரு வழி பாதையில்
ஒரு வழி பாதையில் ஒன்றன் பின் ஒன்றாக சென்ற இருமனம் முற்கால திருமணம், சிறிய இடைவெளியில் இணைந்து செல்லும் தண்டவாளம் போல் பிற்கால திருமணம், இரு பக்கங்களிலும் ஒட்டுநர் இருக்கும் மின்சார இரயில் போல் தற்கால திருமணம்
எல்லா பிறவி
எல்லா பிறவியிலும் உன் காதலில் மூழ்கி திளைக்க வரம் கேட்டேன், காதலித்து கல்யாணம் செய்து கொண்டு பல வருடங்கள் கழிந்தும் வரம் கேட்கும் முதல் ஆள் என உடனே என் முன் தோன்றி வரம் கேட்டது சரியா என உறுதி செய்ய சொன்னார், கலிகாலம்
பழைய நினைவு
பழைய நினைவுகளுடனே காலம் கரைகிறது வயோதிகம், புதிய தலைமுறையுடன் போட்டி போடவும் முடியவில்லை, புரிந்து கொள்ளவும் முடியவில்லை, இருந்தும் நம் இருப்பை காட்டிக் கொண்டு இருக்க வேண்டி உள்ளது, இல்லையெனில் இந்த சமூகமும், சொந்தங்களும் மறந்து விடுகின்றனர், தனித்து இருக்கிறேன், தனிமையில் இருக்கிறேன், நினைவுகளை அசை போட்ட படி, காலனை வெல்வது எளிது, காலம் கடத்துவது பெரிதாக உள்ளது
ஐம்பதாயிரம் கோடி
ஐம்பதாயிரம் கோடியாவது வேண்டும் என்று நினைத்து இருந்தேன், பின்பு ஐயாயிரம் கோடியாகவும், பின்னர் ஐந்து கோடியாவது வேண்டும் என நினைத்து இருந்தேன், ஐந்து ரூபாய்க்கு பஞ்சு மிட்டாய் வாங்கும் வரை, பின்பு புரிந்தது மகிழ்ச்சி பணத்தில் இல்லை மனதில் என
பிறை நிலா
பிறை நிலா, முழு நிலா என காதலிக்கும் போது வர்ணித்தேன், அரை நரை வந்த போதும் அதே அழகுடன் தெரிந்தாய் நீ, முழு நரை வந்த பின்பும் அதே அழகு, காதலுக்கு எப்பவுமே கண்ணுமில்லை, வயதுமில்லை
பெற்றோருக்கு பெற்றோர்
அம்மா செய்யும் தியாகத்திற்கு ஈடு இணை அப்பா செய்யும் தியாகம், அதை கொஞ்சமாக நெருங்கி செய்ய வயதான காலத்தில் பெற்றோரை தாங்கும் பிள்ளைகள் உள்ளனர், பெற்றோர்கள் பிள்ளைகள் ஆக, பிள்ளைகள் பெற்றோருக்கு பெற்றோர் ஆகிறார்கள்
சமத்துவம்
சமத்துவம் என்பது எல்லாவற்றிலும் ஐம்பது, ஐம்பது விழுக்காடு அல்ல, தெரிந்தவைகளில் அதிக பங்களிப்பும், தெரியாதவற்றில் குறைந்த பங்களிப்பும் தருவது, தெரியாதவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்குவது
பாதையில் மலராய்
அனைவரும் நினைப்பது அடுத்தவர் பாதையில் மலராய் இருக்கும் என, முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும், முட்களை புறந்தள்ளி முன்னால் செல்பவனுக்கு வாழ்க்கை வசப்படும்