தோல்விக்கு பின் கிடைக்கும் நேரம், வெற்றிக்கு பின் கிடைப்பதில்லை
Full of tamil poems - kavithaigal- kaadhal,social awareness, social information
Saturday, August 24, 2024
அன்பு மகள்
அப்பாவை அன்னை ஆக்கும்
அன்பு மகள், மகளை
கையில் ஏந்தும் முதல்
நாள் முதல் தன்
வாழ்நாள் வரை குழந்தையாக
பார்க்கும் அப்பா, மகளிடம்
தோற்ற அப்பாக்கள் இல்லை,
மகளுக்காக தோற்ற அப்பாக்கள்
உண்டு, அப்பா மகள்
இடையே ஒரு பாசக்கயிறு
எமன் வந்து எடுக்கும்
வரை, அம்மாவிற்கு மகள்
மீது பொறாமை தன்னை
விஞ்சிகிறாள் அன்பில் என,
சொந்த பந்தங்கள் இருந்தாலும்
மகளின் மடியில் மரணிக்க
இருவிழி கசிவால் இசைவு
இறைவனடி
பொன், பொருள், மண், பெண், பதவி, பவுசு,பெயர்,புகழ், அந்தஸ்து, அதிகாரம், அலங்காரம் என்று அத்தனை இருக்க, இறைவனடி என்ற ஒன்றை அடைய யார் வருவார்
மவுனம் பேசுவதில்லை
மவுனம் பேசுவதில்லை, உன் மவுனம் ஆயிரம் அர்த்தங்களை பேசுகிறது
அருகருகே நடந்தாலும் மனங்கள் தொலைவில், விரிசலும் இல்லை, விரும்பவும் இல்லை
சமையலில் நீ கருவேப்பிலையை கிள்ளி போடுகையில் நான் அள்ளி தருகிற முத்தம் சுவை கூட்டும் ச(மையலில்)
மீண்டும் நாம் மாணவரானோம்...
📚📖🖊️✒️🖋️🖌️🖍️📝✏️📐🔏
மீண்டும் நாம் மாணவரானோம்...
மாதிரி சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இரு நாட்கள்...
மாதிரிப் பள்ளி மலர்களின் சங்கமம்...
ஆட்டமும் பாட்டும் சேர்ந்து அமர்க்களமாய் திருமணம்...
அறுசுவை உணவு விருந்தால்,
அறுபட்ட சட்டை பட்டன்...
மண அரங்கை ஒளிர வைத்த மலையாள நட்சத்திரங்கள்...
மணமக்கள் அழகை அள்ள போதாது இரு கண்கள்...
பறந்து வந்த ஒரு நண்பன்,
பாதி இரவில் ஒரு நண்பன்,
பசியோடு மூன்று மணிக்கு படையெடுத்த சில நண்பர்...
துணைவியோடு மூவர்,
துளிருடன் ஒருவன்,
அரங்கை நிறைய வைத்த,
முன்மாதிரி அடலேறுகள்...
அகத்திலும் ஆடையிலும் அழுக்கண்டா வெள்ளை வேந்தர் அரங்க ராமானுஜம் அய்யாவின் அகத்தைத் தேடி
திக் விஜயம்...
நாற்பது ஆண்டுகள் கடந்து அவர் நறுமுக தரிசனம்...
அவர் துணைவியார் உபசரிப்பில் துளிர்த்தது விழித் திவலைகள்...
இன்றையை நம் நல்வாழ்க்கை அய்யா தொடக்கி வைத்த அடித் தளத்தில்...
ஆனந்தக் களிப்பில் அழுகை முத்துக்கள் அவர் விழியில்...
ஆசியும், வாழ்த்தும் பெற்று திளைத்தன நம் இதயங்கள்...
ஆதீன கர்த்தரின் அழைப்புக்கு உட்பட்டு
திலகவதியார் ஆதீனத்தில் திரண்டது நட்புக் குழு...
புத்தகமும் பாத்திரமும் அவர் பொற்கரத்தால் அனைவருக்கும்...
மனதின் மடியில் இருந்து மகிழ்ச்சி பொங்கிய உரையாடல்...
பதினைந்து வயதை நோக்கி பயணித்த உள்ளங்கள்...
அறுபது நிமிடங்கள் இரண்டு,
அரை நொடியாய்க் கடந்தன...
அனைவரின் இதயங்களும் அன்பாற்றில் மூழ்கின...
ஞானமும் கல்வியும் நமக்களித்த பள்ளி நோக்கி,
ஆவலுடன் ஒரு பயணம்...
நாம் உருண்ட மண்ணில்,
நாலும் கற்ற வகுப்பில்,
நடந்து திரிந்த பாதையில்,
ஓடி விளையாடிய மைதானத்தில்,
காலடி பட்டதும்,
மேனி சிலிர்த்தது...
கண்ணீர் படர்ந்தது,
கண்களில் பழைய காட்சிகள் நிறைந்தது...
நம்மை ஆளாக்கிய ஆலயம் அது...
நமக்கு அறிவூட்டிய தாய் மடி அது...
நான்காண்டு பள்ளிப் பருவம்,
நரை விழுந்தும் நெஞ்சில் நிறையும்...
அகமெங்கும் ஆனந்தம்...
அகன்று விழுந்த மனக் கவலை...
நம்மை இணைத்த நட்பின் வலிமை,
நாளும் நாளும் அறுகிப் பெருகும்...
வாய்ப்பைத் தந்த பாக்யாவுக்கும்,
வாகனம் ஓட்டிய சிவாவுக்கும்,
களிப்பை ஊட்டிய வருசை, வெங்கிக்கும்,
கடிகளைப் பொறுத்த தோழிகளுக்கும்,
தலைநகர் தல இராமனுக்கும்,
இரவில் உதவிய EB பழனிக்கும்,
இடித்து உரைத்த சுந்தரன் பழனிக்கும்,
மகிழ்ச்சி மருத்துவன் இரமேசுக்கும்,
சென்னைவாசிகள் சீதரன், சங்கர்,
முத்து மாரிக்கும்,
பெங்களூர் ராஜன்,
கோவை குணா,
இலுப்பூர் சண்முகம்,
திருச்சி மைந்தன் வேலுமணிக்கும்,
இணைந்து பயணித்த தமிழ்ச்செல்வனுக்கும்,
எனது எழுத்தினை ரசித்த நண்பர்களுக்கும்,
நன்றியை நவில்கிறேன்...
இந்த நட்பு என்றும் தொடர,
இறையருள் நமக்கு துணையாய் இருக்கும்🙏
நட்புடன்,
சரவணன் திருவண்ணாமலை
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
தொட்டு விடும் தூரத்தில் நிலவு
தொட்டு விடும் தூரத்தில் நிலவு, என்னருகில் நீ
வண்ணங்களில் வர்ண ஜாலம் காட்டும் வானவில் மழைகால வானில், ☔குடை கொண்டு நடக்கின்றது என்னருகில்
இடியோடு மழை கோடை மழை, இசையோடு மழை நீ பேசுகையில்
இரு கைகள் தேவை இல்லை ஒரு குடை பிடிக்க, ஒரு குடை தேவை உன் கை பிடிக்க
சந்திராயன் சென்றது நிலவை பார்க்க, நிலவு வந்தது என்னைப் பார்க்க, நான் உன் கண்ணை பார்க்க நிலவுக்குள் நிலவு
ஸ்வரம் ஸரி
இசையில் ஏழு ஸ்வரம், எனக்கு தெரிந்த ஒரே ஸ்வரம் "நி"
சங்கீத சாகரத்தில ஏழு ஸ்வரம், சம்சார சாகரத்தில் இரண்டே ஸ்வரம் "ஸரி", நி "ஸரி"
அனைத்திலும் என்பர்
பணம் வேண்டுமா, பதவி வேண்டுமா என்றால் பதவி வேண்டும் என்பர்,
பணம் வேண்டுமா, பாசம் வேண்டுமா என்றால் பாசம் வேண்டும் என்பர்,
பணம் வேண்டுமா, மகிழ்ச்சி வேண்டுமா என்றால் மகிழ்ச்சி வேண்டும் என்பர்,
பணம் தேவையில்லையா என்றால்
அதுதான் அனைத்திலும் என்பர்
ரக்க்ஷா பந்தன்
அக்கா தங்கைகளே இன்று நானே உங்களை தேடி வருகிறேன், நீங்கள் வர வேண்டாம், தவிப்புடன் அலுவலகத்தில் வாலிபன்
குளவி
சில காலம் சுற்றி விட்டு செல்லும் ஈசல் அல்ல நான், உன் இதயத்தை குடைந்து நிரந்தரமாக கூடு கட்டி தங்கும் குளவி நான்