உலகின் மிக அழகான
இடத்திற்கு கூட்டிச் சென்று
கேட்டாலும் உன்னை விட
அழகு என ஒப்புக் கொள்ள
என் மனம் மறுக்கிறது
Full of tamil poems - kavithaigal- kaadhal,social awareness, social information
உலகின் மிக அழகான
இடத்திற்கு கூட்டிச் சென்று
கேட்டாலும் உன்னை விட
அழகு என ஒப்புக் கொள்ள
என் மனம் மறுக்கிறது
இன்றும் என் அப்பாவின்
அதிகாரத்தை இரசிக்கின்றேன், கட்டளைகள் ஏற்கிறேன், நாம்
பெற்றோர் ஆனாலும் அப்பாவிற்கு
சிறு பிள்ளை தானே
வாழ்க்கை அதன் போக்கில்
போகிறது, நாம் தான்
நினைத்து கொண்டு இருக்கிறோம்
மாற்றிக் கொண்டு இருப்பதாக
காதல் திருமணமே முறிகிறது
இக்காலத்தில், பெற்றோர்கள்
பார்த்து செய்த திருமணம்
தொடர காரணம் காதலா?
சகிப்புத்தன்மையா? இரண்டுமா?
மாற்ற முடியாமலும், மாற
முடியாமலும், இணையாமல் செல்லும்
தண்டவாளம் போல, பலர்
குடும்ப வாழ்க்கை தொடர்கிறது,
அதனால் தான் இன்னும்
இருக்கிறது குடும்பம் என்பது இந்தியாவில்
நாம் எது செய்தாலும்
கை கொட்டி சிரிக்கும்
உலகம், நாம் உச்சம்
அடையும் போது கை
தட்டி வரவேற்கும்
உன் விழியின் அசைவை
தொடர்கிறேன், அது என்னில்
முடிகிறது, உன் இதயத் துடிப்பைக்
கேட்கின்றேன், அது என்
பெயர் சொல்கிறது, உன்
சுவாசக் காற்றை பார்கிறேன்,
உன் உயிர் மூச்சாக
நானே இருக்கிறேன்
உலகத்தில் எவ்வளவு பேர்
இருந்தாலும் உனக்கு தோள்
கொடுத்து உதவுபவரே இந்த
உலகத்தில் உள்ளவர்
திருட்டை பார்த்து, திருடியைப்
பார்த்து சந்தோஷம் கொண்டேன்,
என் இதயத்தை திருடியவள்
நீ என்பதால்
நான் உன்னை காதலிக்கிறேன்
என்று நேரடியாக சொல்லாத போதும், செய்கையில் பல முறை
பதிவு செய்திருப்போம்
ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம்
இருக்கிறது, அதில் ஆனந்தம்
அடையுங்கள், அடுத்த உலகை
எட்டி பார்க்க தேவை இல்லை
உன் பிறந்த நாள் தான்
எனக்கும் பிறந்த நாள், நீ
எனக்காக பிறந்த நாள்
மீண்டும் மீண்டும் காதல் வரும்
என்று தான் தோன்றுகிறது,
நீ சிரிக்கும் போது, சிணுங்கும் போது,
ஓரப்பார்வையில், இப்படி ஒவ்வொரு முறையும் உன்னுடன் காதலில்
மீண்டும் மீண்டும் விழுகின்றேன்
மேலே உள்ளவனுக்குத் தெரியும்
எப்போது தலைகணம் இறக்குவதென்பது, கீழே உள்ளவனுக்குத் தெரியாது எப்போது தலைகணம் இறங்குமென
நான் சுயநினைவின்றி மருத்துவ
மனையில் இருந்த போதிலும்,
உன் நினைவோடு இருந்ததாக
மருத்துவர் சொல்லி ஆச்சரியப்பட்டார்
உன் கொலுசு சத்தம்
கேட்டாலும் திரும்ப மாட்டேன்,
ஒடி வந்து கண் பொத்தும்
சாக்கில், செல்லமாக பெரும்
முத்தம், தலை கோதும்
தீண்டலை இழக்க விரும்பவில்லை
பல அப்பாவிற்கு பெண் பிள்ளைகளுக்கும், பல அம்மாவிற்கும்ஆண் பிள்ளைகளுக்கும் இடையே கூடுதல் மெல்லிய அன்பு இழை ஓடி கொண்டிருக்கும்
பிள்ளைகள் பெற்றோராகும் போது,பெற்றோர்கள் சிறுபிள்ளையாகிறார்கள், பெற்றோரை உன் பிள்ளை போல் பார்த்துக் கொள், நாளை நீயும் சிறுபிள்ளையாவாய்
உன்னிடம் சொல்ல நினைத்து
இதயத்தில் பூட்டி வைத்த
ஒரு வார்த்தை "காதல்",
நீ சொன்ன " எனக்கு கல்யாணம் "
என்ற இரு வார்த்தையில்
இதயம் இரண்டானது, காதல் துண்டானது
சபையில் சரளமாக பேசும்
நான், உன்னிடம் ஓரிரு
வார்த்தை தான் பேசுகிறேன்,
வார்த்தைகளின்றி தவிக்கிறேன், நீ
பேசிக்கொண்டே இருக்கிறாய், நான்
கேட்டு கொண்டே இருக்கிறேன்
கவிதை வழியாக காதலை
சொல்லிவிட்டேன், பிடிச்சிருக்கு என்றாய், குழம்பிப் போய்
தவிக்கிறேன், பிடித்தது கவிதையா?
காதலா?
அருகில் சென்றால்,
தள்ளி தள்ளி போகிறாள்,
எனை தவிர்க்க பார்க்கிறாள்,
முகம் பார்த்து பேசாமல்
திரும்பி கொள்கிறாள்,
தவிப்பில் கேட்டேன் ஏன் என்று?
இடைவெளி தேவை கொரோனா காலம் என்றாள்
மகள் கேட்கும் ஒவ்வொரு
கேள்விக்கும் பெருமை கொள்கிறேன்,
மகளுக்கு தெரியவில்லை இவள்
கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும்,
கணவன் சிறுமை கொள்வானென
வயதான காலத்தில் கை
கோர்த்து, சிரித்துக் கொண்டு
செல்லும் தம்பதிகள் பார்த்து
இழிவாக நகைத்தார்கள்,இந்த
வயதில் தேவையாயென,
தடுமாறாமல் ஒருவரை ஒருவர்
தாங்கி செல்கின்றனர் என
அறியவில்லை அவர்கள்
குழந்தையான என் விரல்
பிடித்து நடை பழக்கினாள் அம்மா,
வாலிபத்தில் கை கோர்த்து
உலா சென்றேன் மனைவியுடன்,
வயோதிகத்தில் தாங்கி பிடித்து
நடக்கின்றேன் என் மகளுடன்,
முதலும் கடைசியும் சார்ந்து
இருக்கிறோம், இடையில் மட்டுமே
தலைதூக்கும் "நான்"
இருவரும் உரசி நடக்கிறோம்,
ஏதோ சொல்ல நினைக்கிறோம்,
சொல்லாமல் தவிக்கிறோம், நீ சொல்வாயென நானும், நான்
சொல்வாயென நீயும் எதிர்
பார்த்து ஏதேதோ பேசினோம்,
உனை பற்றி எனை சுற்றி
உள்ளோரிடம் பேசிக்கொண்டே இருக்கிறேன், எனை பற்றி உனை சுற்றி உள்ளோரிடம் பேசிக்கொண்டே இருக்கிறாய், இருந்தும் எதுவும் இல்லாதது போல், அவரவர் வழியில்
சென்று கொண்டு இருக்கிறோம்
பேருந்து வந்து நின்றது,
உன் பார்வை நீள்கிறது
எனை தேடி, என் பார்வை நீள்கிறது
உனை தேடி, பார்வைகள்
சந்தித்ததும் இதயத்தில் இடி
மின்னல், நாணத்தால் நீ இமைகள்
மூட, நான் மட்டும் பார்த்துக்
கொண்டே இருக்கிறேன், பேருந்து
நகர்ந்தது, என் பார்வை
உன்னுடன் பயணிக்கிறது,
கண்கள் கலந்தது,
இதயம் மாறியது,
பேசுவது எப்போது,
வாழ்க்கை தொடங்குவது எப்போது?
ஒவ்வொரு முறை வாழ்க்கையில்
தடுமாறும் போது, தூக்கிவிட
ஆட்கள் இருக்காது, நீயாக எழ வேண்டும், அப்போதுதான் அடுத்த முறை பயம் இருக்காது, மீண்டும்
மீண்டும் வீழ்ந்தாலும் எழ
முயற்சி செய், மீண்டு எழுந்தாலும், வீழ்ந்தாலும் முயற்சி
தான் முக்கியம், அது தான்
வாழ்க்கை, அது தான் பயணம்
நான் நானாக, நீ நீயாக,
அவரவர் அவரவராக இருந்தாலும்
விட்டு கொடுத்தல், சகிப்புத்தன்மை
இல்லா குடும்பம் நாணயத்தின்
இரு பக்கமாக கணவன் மனைவி
இன்றி, "நா" நயம் கெட்டு, உறவுகள் விட்டு போகும்
உனை பார்த்தேன், உன் நடை செல்லும்
திசை பார்த்தேன், எதிர் வீட்டு புது குடி,
முகம் பார்த்தேன், எங்கோ பார்த்த நியாபகம், உன் குடும்பம் என் குடும்பம் என வேறுபாடு இன்றி பழகி, இப்போது உன் ஒவ்வொரு செயலும் எனக்கு அத்துப்படி, பின்பு தான் தெரிந்தது என் அப்பாவின்இன்னொரு குடும்பம் என,
மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறேன்
அண்ணணாக
சாளரம் வழியே என் காதல் பார்வை உன் இதயம் நுழைந்து உசுப்ப, நீ வீசும் ஓரக்கண் பார்வை என்னுள் ஏதோ பண்ண, காதல் மழையில் இருவரும் இணைந்து நனைய, சைகை மொழியில் ஆயிரம் பேசினோம், உனக்குள் உற்சாகம், எனக்குள் கொண்டாட்டம், பொங்கும் இன்பம் அனைத்து தடைகளையும் தாண்டும்
அப்பா
ஈன்றெடுக்காத அம்மா, சம்பளம் இல்லா ஆசிரியர், வீட்டிலே ஒரு குரு, பணம் தந்து கொண்டே இருக்கும் அட்சய பாத்திரம், என் நம்பிக்கை, என் நட்சத்திரம், எனை தாங்கிய ஊன்றுகோல், எனது தூண்டுகோல்,
அவரால் நான், அவரின் பிள்ளை என்பதில் பெருமை எனக்கு, வாழ்க பல்லாண்டு, வளர்க உம் தொண்டு
மரியாதை கலந்த அன்பு
என் அப்பாவிடம் அன்று,
மரியாதை கலந்த அன்பு
என் பிள்ளையிடம் இன்று,
எதாவது மரியாதை குறைவாக சொல்லி விடுவான் என்று
உன் பாதம் தொட்டு
செல்லும் அலைகளுக்கு உனைவிட்டு
பிரிய மனமில்லை, அதனால்
மீண்டும் மீண்டும் வந்து
உன் கால்களை தழுவுகின்றன
முன்னேற்றம் முன்னேற்றம் என்று
எதை கூறுகிறோம், வானுயர்ந்த
கட்டிடங்களா, வானூர்திகளா, அலைபேசியா, சொந்தங்களை தொலைத்து, உடல் நலத்தை தொலைத்து, எதை சாதிக்க போகிறோம், எதை விட்டு செல்கிறோம்
அடுத்த தலைமுறைக்கு
பிரிவுகள் இல்லா மதமும் இல்லை சாதியும் இல்லை, பிரிவினையை தூண்டி ஒரு மதமோ, சாதியோ உலகை, நாட்டை ஆண்டால் அந்த மதத்தில், சாதியில் இருக்கும் பிரிவுகளில் உயர்ந்தது எது, தாழ்ந்தது எது?
எதேதோ மாற்றங்கள் உள்ளுக்குள்,
கண்ணாலே பரிமாற்றம், புரிதல் இருக்கும் இருவருக்கும், இருந்தும் தொடராமல் முடியும் இந்த
உணர்வை, பல இதயங்கள்
கடந்து போகும், நினைவுகள்
மட்டும் வந்து வந்து
போகும் வாழ்நாள் முழுவதும்
மீட்டாது வீணையின் நாதம்
கேட்காது, முயலாமல் உன்
திறன் உனக்கு தெரியாது,
முயற்சித்து பார், சிகரம்
தொடு,
பெருந்தொற்றா?, தொலைபேசியில் விசாரிக்கும் சொந்தங்கள், களமாடாத பந்தங்கள், களமாடும் மருத்துவ துறை சிங்கங்களே வாழ்க பல்லாண்டு, வளர்க உங்கள் தொண்டு
சொல்லதான் நினைக்கிறேன்,
சொல்லாமல் தவிக்கிறேன், நெஞ்சு அடைக்கிறது, வரும் மூச்சு
குறைகிறது, பிறகு தான்
தெரிகிறது காதல் அல்ல, பெருந்தொற்றென்று
நீ யாரென உன் இறுதி ஊர்வலத்தில் கூடும் கூட்டம் சொல்லும், இப்ப உயிரற்ற உடல்கள் தான் கூட்டமாக செல்கிறது.
கூட்டம் தவிர், மிச்சம் இருக்கட்டும் மனித இனம்
நடந்து சென்றேன், கடந்து சென்றாய்,
மின் வெட்டு பார்வையில் இடியும்
மின்னலும் இரு சேர இறங்கியது,
மூர்சையானேன், தாங்கி பிடித்தாய்,
கண் திறந்தேன், உன் மடியில்
நான், முழு நிலவாய் நீ, இப்படியே
காலம் முழுவதும் இருக்க கேட்டேன்,
கணவரிடம் கேட்பதாக சொன்னாய்,
கடைகாரரிடம் தண்ணீர் வாங்கி தெளித்து கொண்டேன், தெளிந்தது
நான், நீ, நாம் இருவர்,
நமக்கு இருவர்,
இது தான் கூட்டுக் குடும்பம்
இப்போது,
இனி வரும்
காலங்களில் நான், நீ தான்
கூட்டுக் குடும்பம்
முன்னால் நடந்தாய், பின்னால் தொடர்ந்தேன், தவித்தேன், சொல்ல துடித்தேன், திரும்பி பார்த்தாய், தைரியமாக பூ விழப்போகிறது என்றேன், பூ எப்போதோ விழுந்து விட்டது என்றாய், வண்டுக்கா சொல்லி தரவேண்டும் பூவை மொய்க்க
கவிதை வழியாக காதலை
சொல்லிவிட்டேன், பிடிச்சிருக்கு என்றாய், குழம்பிப் போய்
தவிக்கிறேன், பிடித்தது கவிதையா?
காதலா?
அப்பா அம்மா
சொந்த காலில் நிற்க வேண்டும்
உங்களிடம் கற்றுக் கொண்டோம்
கடின உழைப்பு
உங்களிடம் கற்றுக் கொண்டோம்
சுயமாக முன்னேற வேண்டும்
உங்களிடம் கற்றுக் கொண்டோம்
பிறருக்கு உதவு
உங்களிடம் கற்றுக் கொண்டோம்
உண்மை பேசு
உங்களிடம் கற்றுக் கொண்டோம்
இன்னும் கற்றல் பல
நீங்கள் சொல்லிக் கொடுக்கவில்லை
வாழ்ந்து காட்டுகிறீர்கள்
வாழ்க பல்லாண்டு
அருகில் சென்றால்,
தள்ளி தள்ளி போகிறாள்,
எனை தவிர்க்க பார்க்கிறாள்,
முகம் பார்த்து பேசாமல்
திரும்பி கொள்கிறாள்,
தவிப்பில் கேட்டேன் ஏன் என்று?
இடைவெளி தேவை கொரோனா காலம் என்றாள்
மகள் கேட்கும் ஒவ்வொரு
கேள்விக்கும் பெருமை கொள்கிறேன்,
மகளுக்கு தெரியவில்லை இவள்
கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும்,
கணவன் சிறுமை கொள்வானென
வயதான காலத்தில் கை
கோர்த்து, சிரித்துக் கொண்டு
செல்லும் தம்பதிகள் பார்த்து
இழிவாக நகைத்தார்கள்,இந்த
வயதில் தேவையாயென,
தடுமாறாமல் ஒருவரை ஒருவர்
தாங்கி செல்கின்றனர் என
அறியவில்லை அவர்கள்
குழந்தையான என் விரல்
பிடித்து நடை பழக்கினாள் அம்மா,
வாலிபத்தில் கை கோர்த்து
உலா சென்றேன் மனைவியுடன்,
வயோதிகத்தில் தாங்கி பிடித்து
நடக்கின்றேன் என் மகளுடன்,
முதலும் கடைசியும் சார்ந்து
இருக்கிறோம், இடையில் மட்டுமே
தலைதூக்கும் "நான்"
இருவரும் உரசி நடக்கிறோம்,
ஏதோ சொல்ல நினைக்கிறோம்,
சொல்லாமல் தவிக்கிறோம், நீ சொல்வாயென நானும், நான்
சொல்வாயென நீயும் எதிர்
பார்த்து ஏதேதோ பேசினோம்,
உனை பற்றி எனை சுற்றி
உள்ளோரிடம் பேசிக்கொண்டே இருக்கிறேன், எனை பற்றி உனை சுற்றி உள்ளோரிடம் பேசிக்கொண்டே இருக்கிறாய், இருந்தும் எதுவும் இல்லாதது போல், அவரவர் வழியில்
சென்று கொண்டு இருக்கிறோம்
பேருந்து வந்து நின்றது,
உன் பார்வை நீள்கிறது
எனை தேடி, என் பார்வை நீள்கிறது
உனை தேடி, பார்வைகள்
சந்தித்ததும் இதயத்தில் இடி
மின்னல், நாணத்தால் நீ இமைகள்
மூட, நான் மட்டும் பார்த்துக்
கொண்டே இருக்கிறேன், பேருந்து
நகர்ந்தது, என் பார்வை
உன்னுடன் பயணிக்கிறது,
கண்கள் கலந்தது,
இதயம் மாறியது,
பேசுவது எப்போது,
வாழ்க்கை தொடங்குவது எப்போது?
இலட்சியத்தை அடைய ஓடினால்
இலட்சங்கள் தெரிவதில்லை
இலட்சங்கள் அடைய ஓடினால்
இலட்சியங்கள் தெரிவதில்லை
இரண்டையும் சிலர் அடைவர்
இரண்டையும் சிலர் அடைவதில்லை
விடுமுறை தினமென்பதால் விடியல்
மாறப்போவது இல்லை, ஆனால்
விரும்பி உழைத்தால் விடியல்
உண்டு நம் வாழ்வில்
சொந்தங்கள் இருப்பது தொலைவில்,
தொழில்நுட்பத்தால் மிக அருகில்,
இருந்தும் மனம் ஏனோ
நெருங்க மறுத்து, சொந்தங்களை
தொலைவிலேயே வைத்து இருக்கிறது,
"நாம்" என்பதை மறந்து
"நான்" என்பது முன்னிற்பதால்
-அ.அ
நீ சொல்லும் ஒவ்வொரு
சொல்லிலும் சொக்கிபோய் நிற்கிறேன்
சொல்லின் அர்த்தம் கேட்டால்
மறுபடியும் சொல்ல சொல்கிறேன்
இரண்டு நிமிடங்கள் சொல்லிப்பார்த்து
சிரித்து சென்றாய் நான்
மயங்கி நின்றேன் சலனமற்று
இளமையில் உனை மறக்க
முயன்றேன் முடியவில்லை
முதுமையில் நினைக்க
முயன்றேன் முடியவில்லை
நினைவுகளும் நிரந்திரமல்ல
சொர்க்கத்தில் இடம் உண்டா
சொர்க்கம் எங்கு இருக்கிறது
உன் மடி மீது
தலை சாய்த்து கண்ணயரும்
வேளையில் நீ முடி
கோதி உச்சி நுகரும்
நொடிகள் சொர்க்கம்
தும்பிக்கும் தேனீக்கும்
தெரியவில்லை, நீ
மலரல்ல என்
மனைவியென்று, உனை
சுற்றியே வருகிறது
எனை போலவே
காவிரியில் நீரோடி, கடை
மடை பகுதியில் பயிர்களுக்கு
பாய்ந்தோடி பச்சை பசேல்
என்று இருக்கும்மாம் கிராமம்
எப்போதாவது இப்படி இருக்கிறது
குறைகலில்லா வாழ்க்கையில்லை,
குறைகள் எனக்கெதுவுமில்லை,
குறைகளை குறைகளாய்,
எப்போதும் நினைப்பதில்லை
பணம் பேர் புகழ்
ஒவ்வொருவருக்கும் நீட்சி மாறலாம்
அனைவருக்கும் காட்சிகள் ஒன்றுதான்
பிறப்பு வளர்ச்சி மூப்பு
நீ செல்லும் பாதையில்
உள்ள பூக்கள் எல்லாம்
ஒரே திசையில் உன்
வரவுக்காக காத்திருக்கின்றன மென்மையைக் கற்க எனைப்போலவே
வாழ்க்கை எனும் வானத்தில்
சூரியனாய் நீ, சந்திரனாய்
நான், விண்மீனாய் குழந்தைகள்,
உனை சுற்றியே நாங்கள்
வருகிறோம், உனது உழைப்பால்
எங்கள் வாழ்க்கையில் வெளிச்சம்,
உனது அன்பில் திழைக்கின்றோம்,
உனது அரவணைப்பில் மலைக்கின்றோம்,
குடும்பத்தின் ஆணி வேரே,
வாழ்க பல்லாண்டு,
வளர்க உன் தொண்டு
அவள் சொல்வதெல்லாம் கேட்கிறேன்
அவள் சொல்வதெல்லாம் கேட்பதில்லை
முதலாமவர் என் மகள்
இரண்டாமவர் இன்னொருவர் மகள் (மனைவி)
நீ இல்லாத இடத்தில்,
உன் இருப்பை ஒருவர்
உணர்ந்தால், நினைவு கூர்ந்தால்,
நீ இருக்குமிடம் அதுவே
சிற்றின்பத்திலே காலம்
கடந்துவிடுகிறது பேரின்பம்
எது என்று
தெரியாமல் அறியாமல்
முயலாமல் முடிகிறது
வாழ்க்கை பயணம்
இருபது வரை நாம் குழந்தை
பெற்றோர்கள் சகித்துக் கொண்டார்கள்
அறுபது முதல் பெற்றோர்கள் குழந்தை
நாம் சகித்துக் கொள்வதில்லை