உன் பாதம் தொட்டு
செல்லும் அலைகளுக்கு உனைவிட்டு
பிரிய மனமில்லை, அதனால்
மீண்டும் மீண்டும் வந்து
உன் கால்களை தழுவுகின்றன
Full of tamil poems - kavithaigal- kaadhal,social awareness, social information
உன் பாதம் தொட்டு
செல்லும் அலைகளுக்கு உனைவிட்டு
பிரிய மனமில்லை, அதனால்
மீண்டும் மீண்டும் வந்து
உன் கால்களை தழுவுகின்றன
முன்னேற்றம் முன்னேற்றம் என்று
எதை கூறுகிறோம், வானுயர்ந்த
கட்டிடங்களா, வானூர்திகளா, அலைபேசியா, சொந்தங்களை தொலைத்து, உடல் நலத்தை தொலைத்து, எதை சாதிக்க போகிறோம், எதை விட்டு செல்கிறோம்
அடுத்த தலைமுறைக்கு
பிரிவுகள் இல்லா மதமும் இல்லை சாதியும் இல்லை, பிரிவினையை தூண்டி ஒரு மதமோ, சாதியோ உலகை, நாட்டை ஆண்டால் அந்த மதத்தில், சாதியில் இருக்கும் பிரிவுகளில் உயர்ந்தது எது, தாழ்ந்தது எது?
எதேதோ மாற்றங்கள் உள்ளுக்குள்,
கண்ணாலே பரிமாற்றம், புரிதல் இருக்கும் இருவருக்கும், இருந்தும் தொடராமல் முடியும் இந்த
உணர்வை, பல இதயங்கள்
கடந்து போகும், நினைவுகள்
மட்டும் வந்து வந்து
போகும் வாழ்நாள் முழுவதும்
மீட்டாது வீணையின் நாதம்
கேட்காது, முயலாமல் உன்
திறன் உனக்கு தெரியாது,
முயற்சித்து பார், சிகரம்
தொடு,
பெருந்தொற்றா?, தொலைபேசியில் விசாரிக்கும் சொந்தங்கள், களமாடாத பந்தங்கள், களமாடும் மருத்துவ துறை சிங்கங்களே வாழ்க பல்லாண்டு, வளர்க உங்கள் தொண்டு
சொல்லதான் நினைக்கிறேன்,
சொல்லாமல் தவிக்கிறேன், நெஞ்சு அடைக்கிறது, வரும் மூச்சு
குறைகிறது, பிறகு தான்
தெரிகிறது காதல் அல்ல, பெருந்தொற்றென்று
நீ யாரென உன் இறுதி ஊர்வலத்தில் கூடும் கூட்டம் சொல்லும், இப்ப உயிரற்ற உடல்கள் தான் கூட்டமாக செல்கிறது.
கூட்டம் தவிர், மிச்சம் இருக்கட்டும் மனித இனம்
நடந்து சென்றேன், கடந்து சென்றாய்,
மின் வெட்டு பார்வையில் இடியும்
மின்னலும் இரு சேர இறங்கியது,
மூர்சையானேன், தாங்கி பிடித்தாய்,
கண் திறந்தேன், உன் மடியில்
நான், முழு நிலவாய் நீ, இப்படியே
காலம் முழுவதும் இருக்க கேட்டேன்,
கணவரிடம் கேட்பதாக சொன்னாய்,
கடைகாரரிடம் தண்ணீர் வாங்கி தெளித்து கொண்டேன், தெளிந்தது
நான், நீ, நாம் இருவர்,
நமக்கு இருவர்,
இது தான் கூட்டுக் குடும்பம்
இப்போது,
இனி வரும்
காலங்களில் நான், நீ தான்
கூட்டுக் குடும்பம்
முன்னால் நடந்தாய், பின்னால் தொடர்ந்தேன், தவித்தேன், சொல்ல துடித்தேன், திரும்பி பார்த்தாய், தைரியமாக பூ விழப்போகிறது என்றேன், பூ எப்போதோ விழுந்து விட்டது என்றாய், வண்டுக்கா சொல்லி தரவேண்டும் பூவை மொய்க்க
கவிதை வழியாக காதலை
சொல்லிவிட்டேன், பிடிச்சிருக்கு என்றாய், குழம்பிப் போய்
தவிக்கிறேன், பிடித்தது கவிதையா?
காதலா?
அப்பா அம்மா
சொந்த காலில் நிற்க வேண்டும்
உங்களிடம் கற்றுக் கொண்டோம்
கடின உழைப்பு
உங்களிடம் கற்றுக் கொண்டோம்
சுயமாக முன்னேற வேண்டும்
உங்களிடம் கற்றுக் கொண்டோம்
பிறருக்கு உதவு
உங்களிடம் கற்றுக் கொண்டோம்
உண்மை பேசு
உங்களிடம் கற்றுக் கொண்டோம்
இன்னும் கற்றல் பல
நீங்கள் சொல்லிக் கொடுக்கவில்லை
வாழ்ந்து காட்டுகிறீர்கள்
வாழ்க பல்லாண்டு
அருகில் சென்றால்,
தள்ளி தள்ளி போகிறாள்,
எனை தவிர்க்க பார்க்கிறாள்,
முகம் பார்த்து பேசாமல்
திரும்பி கொள்கிறாள்,
தவிப்பில் கேட்டேன் ஏன் என்று?
இடைவெளி தேவை கொரோனா காலம் என்றாள்
மகள் கேட்கும் ஒவ்வொரு
கேள்விக்கும் பெருமை கொள்கிறேன்,
மகளுக்கு தெரியவில்லை இவள்
கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும்,
கணவன் சிறுமை கொள்வானென
வயதான காலத்தில் கை
கோர்த்து, சிரித்துக் கொண்டு
செல்லும் தம்பதிகள் பார்த்து
இழிவாக நகைத்தார்கள்,இந்த
வயதில் தேவையாயென,
தடுமாறாமல் ஒருவரை ஒருவர்
தாங்கி செல்கின்றனர் என
அறியவில்லை அவர்கள்
குழந்தையான என் விரல்
பிடித்து நடை பழக்கினாள் அம்மா,
வாலிபத்தில் கை கோர்த்து
உலா சென்றேன் மனைவியுடன்,
வயோதிகத்தில் தாங்கி பிடித்து
நடக்கின்றேன் என் மகளுடன்,
முதலும் கடைசியும் சார்ந்து
இருக்கிறோம், இடையில் மட்டுமே
தலைதூக்கும் "நான்"
இருவரும் உரசி நடக்கிறோம்,
ஏதோ சொல்ல நினைக்கிறோம்,
சொல்லாமல் தவிக்கிறோம், நீ சொல்வாயென நானும், நான்
சொல்வாயென நீயும் எதிர்
பார்த்து ஏதேதோ பேசினோம்,
உனை பற்றி எனை சுற்றி
உள்ளோரிடம் பேசிக்கொண்டே இருக்கிறேன், எனை பற்றி உனை சுற்றி உள்ளோரிடம் பேசிக்கொண்டே இருக்கிறாய், இருந்தும் எதுவும் இல்லாதது போல், அவரவர் வழியில்
சென்று கொண்டு இருக்கிறோம்
பேருந்து வந்து நின்றது,
உன் பார்வை நீள்கிறது
எனை தேடி, என் பார்வை நீள்கிறது
உனை தேடி, பார்வைகள்
சந்தித்ததும் இதயத்தில் இடி
மின்னல், நாணத்தால் நீ இமைகள்
மூட, நான் மட்டும் பார்த்துக்
கொண்டே இருக்கிறேன், பேருந்து
நகர்ந்தது, என் பார்வை
உன்னுடன் பயணிக்கிறது,
கண்கள் கலந்தது,
இதயம் மாறியது,
பேசுவது எப்போது,
வாழ்க்கை தொடங்குவது எப்போது?