தினமும் பூக்கும் புது மலர்கள் போல் உன் புன்னகை, என் முகம் மலர்கிறது பூவாய், இதழ் பிரித்து நீ பேச, மெய் மறந்து நிற்கின்றேன், என் பெயர் அவ்வளவு அழகா? நீ உச்சரிக்கையில் தெரிகிறது, விழி மோதி விபத்து, என் இதயத்தில் நீ விழுந்தாய், விழுந்தது நீ, உன் காதலில் வீழ்ந்தது நான், தோற்பதும் அழகு உன்னிடத்தில், வெற்றியும் அழகு உன் காதலை பெற்று
No comments:
Post a Comment