Friday, April 3, 2026

இருவருக்குள்ளும் ஒரு மௌனம்

 இரைச்சல் மிகுந்த உலகில், இரு இதயங்கள் துடிக்கும் கீதம், இருவருக்கு மட்டும் கேட்கும், இருவருக்குள்ளும் ஒரு மௌனம் உன்னை அணைக்கும் போது

அகம் சிரிக்கிறது, முகம் சிரிக்கிறது

 அவளை பார்த்தவுடன் அகம் சிரிக்கிறது, முகம் மறுக்கிறது, எங்கே வீழ்ந்துவிடுவோமென இறுக்கம் காட்டி நிற்கிறது, அரை நொடி பொழுதில் அவளை கண்டு அகம் சிரிக்கிறது, முகம் சிரிக்கிறது

முக்காலத்தை உணராமல்

 ஆசையில் உழன்று வீடுபேரடைய துடிக்கும் போது, துடிப்பு நின்று விடுகிறது, முக்காலத்தை உணராமல், இக்காலத்தில் வாழ்வதால், இக்காலமும் வேண்டும், முக்காலமும் வேண்டும்

எதுவும் நம் கையில் இல்லை

 அறிவியல் ஆன்மீகம் ஆண்டவர், தன்னம்பிக்கை, உழைப்பு, அதிர்ஷ்டம் அனைத்தும் செய்து பார்த்து இறுதியில் சொல்வார்கள் எதுவும் நம் கையில் இல்லை

விழி ஈர்ப்பு விசை

 புவி ஈர்ப்பு விசையை விட, விழி ஈர்ப்பு விசை அதிகம் அறிஞர்களே, காந்த விழிகள் எனை இழுக்கிறது அவளை நோக்கி

ஒன்றும் செய்ய வேண்டாம்


ன்றும் செய்ய வேண்டாம், ஒருவர் பின்னால் இருக்கிறார் என்பதே பலம் தான்

இரு விரல்கள் பிரியாமல்

 உறவில் முன் இருந்து இழுத்து செல்லலாம், பின்னிருந்து தள்ளி செல்லலாம், இணைந்து செல்லலாம், இரு விரல்கள் பிரியாமல் செல்வதே முக்கியம்

மனமும் மணமும்

 மனமும் மணமும் சிறப்பாக இருக்கும் போது அழகான நதி போல வாழ்க்கை சிறக்கும்

நரைத்த தாடி

 கருப்பு வெள்ளை நரைத்த தாடி தடவி பார்க்கும் வயதில் தான் தெரிகிறது மேடு பள்ளம் நிறைந்தது தான் வாழ்க்கை என்று

வீடு பேறு

 தினமும் பொன், பொருள், பெண, மண், அதிகாரம், பெயர், புகழ் இதிலே உழன்று அன்பு, பண்பு, வீடு பேறு என்பதை மறந்து வாழ்கிறோம்

இறைவனை

 இறைவனை யாரும் நேரில் பார்க்கவில்லை, சொர்க்கம் சென்று வந்து யாரும் சொன்னதில்லை, மறுபிறவி எடுத்த நினைவு இல்லை, உலக ஆசையில் உழன்று எதுக்கு வந்தோம் என்று தெரியாமல் போகிறோம்

நிறம் பார்ப்பது

 வெள்ளை ஆடு, கருப்பு ஆடு கறிக்கு நிறம் பார்ப்பது இல்லை, எருமை மாடு பசு மாடு பாலுக்கு நிறம்  பார்ப்பது இல்லை, மனிதனுக்கு ஏன்? 

தாங்கி பிடிக்க

 உலக பொருளாதாரத்தை தாங்கி பிடிக்க 700 கோடி பேர், நாட்டின் பொருளாதாரத்தை தாங்கி பிடிக்க 140 கோடி பேர், என் வீட்டின்பொருளாதாரத்தை தாங்கி பிடிக்க ஒருவர் கூட இல்லையே ஏங்கி தவிக்கும் பல குடும்பங்கள்

முறையற்ற இச்சை

 முறையற்ற  இச்சைக்கு பச்சைக் கொடி காட்டியதால், மிச்சம் பச்சிளம் குழந்தை ஆதரவின்றி

மந்தைகளோடு சிந்தை

 பெரும்பாலும் மந்தைகளோடு சிந்தை ஓடும், எவன் ஒருவன் தனித்தன்மையோடு சிந்தை செலுத்துகிறானோ அவன் பின்னே மந்தைகள் ஓடும்

கீழடி

 கீழடியை தோண்ட தோண்ட உயர பறக்கும் ஓரினம், மீண்டும் புதைக்கப் படாமல் உரக்க சொல்வோம், உலகறியச் செய்வோம்

கூடு விட்டு கூடு பாயும்

 கூடு விட்டு கூடு பாயும் சித்தனடாட நீ, என்னுள் புகுந்து விட்டாய், சிரிக்க சிரிக்க பேசி என் இதயத்தில் கலந்து விட்டாய், உன் அன்பில் நனைந்து, வேறெதுவும் தேவையில்லை எனும் போது வேறிடம் சென்று விட்டாய், இது மெய்யா, பொய்யா என திணறுகிறேன்

Thursday, April 2, 2026

பாசாங்கு செய்கிறோம்

 பெண்ணுரிமை மிளிர்கிறது, சாதி பாகுபாடு குறைகிறது, பொருளாதாரம் மேம்பாடு அடைகிறது, கிராமப்புறங்களில் வலைத்தளம் பறக்கிறது, சொந்தங்கள் குறைந்து, உண்மையான அன்பு மறைந்து, பாசாங்கு செய்கிறோம் மகிழ்ச்சியாக வாழ்வதாக, பணமே பிரதானமாக, மனமோ நிதானமின்றி மிதக்கிறது

மாலை வெயில்


மாலை வெயில்
வெண்ணிலவின் வருகை கண்டு,
வெட்கப்பட்டு கன்னம் சிவந்த சூரியன் செவ்வானமாய்

செல்வம்

 செல்வத்தை பல நாட்கள் தேடினோம்,கடின உழைப்பால் செல்வம் கிடைத்தது, இனி செல்வம் எங்களை விட்டு செல்லாமல் இருக்க சங்கிலியால் கட்டி போட்டோம்,  நன்றிடன் எங்களை பார்த்தது எங்கள் வீட்டு நாய் செல்வம் என்கிற செவப்பு

பொருத்தமின்றி ஆடை

 பொருத்தமின்றி ஆடை அணிந்து இருக்கும் ஜன்னல்கள்

அனுபவத்தில் அழகாக வாழ்ந்து விட்டனர்

 முறையாக கல்வி கற்காத முப்பாட்டனார் எல்லாம் அனுபவத்தில் அழகாக வாழ்ந்து விட்டனர், முறையாக கல்வி கற்ற நாம், முறையற்று வாழ்கிறோம்

ஐம்பது கடக்கும் வரை

 அச்சமில்லை அச்சமில்லை ஐம்பது கடக்கும் வரை, ஐம்பது கடக்கும் போது பணம் கையிருப்பு இல்லை, குழந்தைகள் படித்து முடிக்கவில்லை, உடல் நிலை ஒத்துழைப்பில்லை, திடீரென பயம் தொற்றிக் கொள்ள, ஓரே நாளில் தொழில் அதிபராக, யோகா நிபுணராக மாறி அனைத்தும் சரியானது, கனவில் இருந்து மீண்டு தேடினேன் கண்ணாடியை

Wednesday, April 1, 2026

வாசமில்லா மலர்ரெது

 வாசமில்லா மலர்ரெது, நேசமில்லா மனம் அது

எப்போது நம்மை விட்டு செல்லும்

 ஒரு காலத்தில் கிடைக்காதா என ஏங்குவதே, கிடைத்த பின் எப்போது நம்மை விட்டு செல்லும் என ஏங்குவதும் உண்டு

நாயும் நானும்

 வேறு வேறு இனமானாலும் பழகுகிறோம், இரசிக்கிறோம், பேதம் இல்லை, ஒருவர் மீது ஒருவர் பற்று வைக்கிறோம், நாயும் நானும்

உரிமையாளர் உர்ர்.

 வாகனம் பழுது,   மெக்கானிக் மகிழ்ச்சி, உரிமையாளர் உர்ர்.. 

உடன்கட்டை

 

உடன்கட்டை ஏறுதல் ஒழிக்கப்பட்டது, மனதால் உடன்கட்டை ஏறுதல் இன்றும், நீ இன்றி நான், நான் இன்றி நீ

நிறைவோடு

 குறைகள் இருக்கிறது ஆயிரம், குறை சொல்பவர்கள் ஆயிரம், புறந்தள்ளி நிறைவோடு வாழ கற்றுக்கொள்

திருடன்

 அவளின் இதயம் என்னும் பொக்கிஷத்தை கொள்ளை கொண்ட திருடன் நான், ஆதலால் கண்களால் கைது செய்து, கைகளால் விலங்கிட்டு கல்யாணம் செய்ய தீர்ப்பு வழங்கி, முத்திரையாக என் கன்னத்தில் முத்தம்

ஓடி போன ஊரை

 ஓடி போன ஊரை, திரும்பி வந்து பார்த்தேன், வீடு இருந்த இடத்தில் சிறு கல்லு கூட இல்லை, சுற்றி வீடும் இல்லை, சுற்றத்தாரும் இல்லை, நினைவு கூர்ந்து பார்க்க அத்தனையும் பசுமையாக நெஞ்சில்

தானே வரும்

 சுதந்திரம், மகிழ்ச்சி உனது பிறப்புரிமை, உன் சுதந்திரம் பேணப்படும் போது மகிழ்ச்சி தானே வரும்

மின் தூக்கி விண்ணுலகம் வந்ததோ

 மின் தூக்கியில் மேல்தளம் சென்றேன், கதவு திறக்க தேவதைகள், நிலாக்கள் வாசலில், மின் தூக்கி விண்ணுலகம் வந்ததோ என திகைத்தேன், இல்லை  மேல் தளம் தான்

மண்ணில் வாழும் நிலவு

 அதிகாலையில் மட்டும் தோன்றும் நிலவு என்னது, என்னவள் கோலமிடும்  அழகு, மண்ணில் வாழும் நிலவு

விடியும் நாளை

 கனவுகளை சுமந்து களைப்பில் தூக்கம், கனவுகளை நினைவாக்க விடியும் நாளை

என்னை பார் யோகம் வரும்

 எந்த யோகமும் இல்லாமல் பொதி சுமக்கும் நான், என்னையே கண்ணாடியில் பார்க்கிறேன், என்னை பார் யோகம் வரும்

தவிக்கும் தள்ளு வண்டியும், நானும்

 40 வருடங்கள் தள்ளு வண்டியில் வியாபாரம், கடமை முடிந்தது என ஓய்வெடுக்க முடியாமல் தவிக்கும் தள்ளு வண்டியும், நானும்

இன்னொன்று மீண்டும் பெற

 இதமாய் முத்தம் தந்து, இதழில் முத்தம் தந்து, கண்ணுறங்க சொன்னாள், கண்ணயற்தாலும் விழித்திருக்கிறேன் இன்னொன்று மீண்டும் பெற

கனவுகள் மெய்ப்பட

 நன்றாக வாழ வேண்டும் என்பது இளவயது கனவு, நன்றாக சாக வேண்டும் என்பது முது வயது கனவு, கனவுகள் மெய்ப்பட வேண்டும்

முத்தம் துறந்தவனாக

 ஒற்றை முத்தம் கேட்டதற்கு ஊடல் கொள்வாய் எனில், சந்நியாசி காதலனாகிறேன், முற்றும் துறந்தவனாக அல்ல, முத்தம் துறந்தவனாக

ஏங்கி வேண்டுகிறோம்

 பணம், பதவி, பெயர், புகழ் என பரபரப்பாக அலையும் நாம் , கடைசியில் அமைதியான தூக்கத்திற்கும், சாவதற்கும் ஏங்கி வேண்டுகிறோம்

பழைய செருப்புடன்

 அழகான கால்கள், அழகான செருப்பு, அணிந்து பார்த்தேன், நடந்து பார்த்தேன், விலை பார்த்தேன், குறைவுதான், மகிழ்ச்சியுடன் பணம் கொடுக்கும் போது தான் தெரிந்தது விலையில் ஒரு இலக்கம் அழிந்து போனது, புது செருப்பு விட மனம் இல்லாமல் , பழைய செருப்புடன்  வீடு நோக்கி

தினமும் அன்னையர் தினம்

  தினமும் அன்னையர் தினம் தான், அன்னை இல்லாமல் தினம் ஏது? அன்னை பற்றிய எண்ணம் இல்லாமல் நாள் ஏது?  இருப்பினும் அவரின் வேலைக்கு இடையே அன்னைக்கே அவர் பற்றிய நினைவு ஊட்ட அன்னையர் தினம்

இரண்டும் கலந்த நீ

 சில்லென சாரல், குளிர் காற்று, தென்றலுக்கு இதமாக சூடான தேனீர் வேண்டுமா? இனிய இசை வேண்டுமா என்றால் இரண்டும் கலந்த நீ அருகில் இருந்தால் போதும் என்கிறாய்

முதுமையில் காதல்

 சிறு வயது காதல் அறியாதது, வாலிபத்தில் காதல் ஆசை கொண்டது, நடு வயது காதல் காமம் கொண்டது, முதுமையில் காதல் முழுமை கொண்டது

புவி ஈர்ப்பு விசையை விட, விழி ஈர்ப்பு

 புவி ஈர்ப்பு விசையை விட, விழி ஈர்ப்பு விசைக்கு தான் அதிக சக்தி போலும், எனை இழுத்துச் செல்கிறது அவளை நோக்கி, மனசு இலகாகி பறக்கிறது

காகித பூவாய் இன்றும் பூத்திருக்கிறது

 

சிலு சிலுவென காற்று, கரு மேகம் இதமாக சூழ, சிறு சிறு மழைத்துளி மெதுவாய் மேனியில் பட, ஒவ்வொரு துளியிலும் அவன் முகம் தெரிய, கவிதை ஆறாக பெருகி ஓட, காகிதம் கவிதையில் நிரம்பி வழிய, காகிதம் பார்த்தது காதலன் அல்ல பெற்றவர், உடனே திருமணம் எனக்கு வேறொருவருடன், காதல் காகித பூவாய் இன்றும் பூத்திருக்கிறது

கணிபொறியாளன்

 முதுகில் பெரிய பை, சிறிய தொப்பை பள்ளி மாணவன்,முதுகில் சிறிய பை  பெரிய தொப்பை கணிபொறியாளன்

கிடைத்த வாழ்க்கையை பிடித்த மாதிரி

 

சாதனையாளராக இல்லாவிட்டால் என்ன, சாதாரணமான ஆளாக இருப்போமே, கிடைத்த வாழ்க்கையை பிடித்த மாதிரி வாழ்வோமே

அமெரிக்க நேரப்படி

   நம் நாட்டு நாய்கள் அமெரிக்க நேரப்படி வேலை செய்கின்றன, பகலில் தூங்கி, இரவில் காவல்

எல்லோரும் ஒரே மதம், சாதி, மொழிக்கு மாறிவிட்டால்

 எல்லோரும் ஒரே மதம், சாதி, மொழிக்கு மாறிவிட்டால்  பிரச்சினைகள் குறைந்து விடுமா? வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியா, இந்த மனித குலம்

நலம் தானா?

 நலம் தானா?

நலம் தானா மெனக்கெட்டு ஊரில் போய் விசாரித்து வந்தோம், பின்பு கடிதம், தொலைபேசி, அலைபேசி,  இப்போது நலம் தானா கேட்க தான் ஆள் இல்லை

முடங்கியது நாம்

 கிராமப்புற வாழ்க்கையை முடக்கியது நகர்ப்புற வாழ்க்கை, நகர்ப்புற வாழ்க்கையை முடக்கியது பெருநகர வாழ்க்கை, பெருநகர வாழ்க்கையை முடக்கியது கணிப்பொறி,கணிப்பொறியை முடக்கியது அலைபேசி, அலைபேசி முடக்கியது நம் கண்களை, மொத்தத்தில் முடங்கியது நாம் தான்

பூகம்பம் வருமா

 கன்னத்தில் முத்தமிட்டால் பூகம்பம் வருமா? வரும், இருவருக்கு மட்டுமே வரும் பூகம்பம்

ஒருவருக்கொருவர் பிடிமானம் இருப்பதால்

 நடுக்கத்தால் கரம் இறுகப் பற்றி செல்லும் வயதான தம்பதிகள், தடுமாற்றம் இல்லாமல் செல்லும் வாழ்க்கை ஒருவருக்கொருவர் பிடிமானம் இருப்பதால்

குடை இருந்தும் நனைகிறேன்

 குடை இருந்தும் நனைகிறேன் உன் கரம் பிடித்தபடியே, நனைந்த பின் குடை பிடிக்கிறேன் உனை அணைத்தபடியே

மனதில் தனி இடம்

 நல்லதோ, கெட்டதோ எல்லா முதல் அனுபவத்திற்கு மனதில் தனி இடம் உண்டு

எவன் சொன்ன போதனையும் ஏறாது

 காதலில் கசிந்துருகி இருக்கையில், செவியில் எவன் சொன்ன போதனையும் ஏறாது, காதல் கசந்து போகையில், இவன் சொல்லும் போதனைகள் புத்தன் கூட சொன்னதில்லை

விதி வேண்டும்

 விதியை மதியால் வெல்லலாம், மதி கிடைப்பதற்கு விதி வேண்டும்

பிப்ரவரி மாதத்தில் ஏப்ரல்

 

பிப்ரவரி மாதத்தில் ஏப்ரல் 1, பூவுடன் நான்

இரு மனங்களின் இடைவெளி

 எதிர் பார்பதற்கும், நடப்பதற்கும் உள்ள வித்தியாசம், இரு மனங்களின் இடைவெளி

இராமனும், இராவணனும் ஒருவனுக்குள்ளே

   இருப்பது ஒரு முகம், இருப்பினும் நாம் அணிவது பல முகம், எடுப்பது தசாவதாரம், காண்பிப்பது பத்து தலை, இதனால் தான் இராமனும், இராவணனும் ஒருவனுக்குள்ளே எப்போதும் 

சாமி என அழைத்தனர்

 கோயிலுக்கு மாலை போட்டேன், சாமி என அழைத்தனர், சாதி தற்காலிகமாக மறைந்தது

தாய்க்கு பின் தாரம்

 தாய்க்கு பின் தாரம் சரிதான், 

தாரம் தான் பின்பு தாயாகிறாள் கணவனுக்கு

மனம் அடிக்கடி நினைக்கிறது

 மறந்து விட வேண்டும் என்பதை மனம் அடிக்கடி நினைக்கிறது

மீட்டப்படாத வீணையிலும்

 மனிதன் என்றால் திறமை உண்டு, 

வீணை என்றால் நாதம் உண்டு, 

மீட்டப்படாத வீணையிலும். 


கரை கப்பல் நோக்கி நகராது

 கரை கப்பல் நோக்கி நகராது, நம் இலக்கை நோக்கி நாம் தான் நகருவோம்

மீசைகளின் ஆசை

 கணவனை சிறிதேனும் மாற்ற வேண்டும் என்பது  மனைவியின் ஆசை, அதை பண்ண கூடாது என்பது மீசைகளின் ஆசை

இகழ்ச்சியே புகழ்ச்சியாக மாறும்

 இகழ்ச்சி வந்தாலும் நல்ல செயலை செய்ய முயற்சி செய், பின்னர் இகழ்ச்சியே புகழ்ச்சியாக மாறும்

இல்லாததை தேடுவது தான் வாழ்க்கை

 தேடுவது தான்  வாழ்க்கை, இல்லாததை தேடுவது தான் வாழ்க்கை, தேடுவது கிடைத்துவிட்டால்,   இல்லாததை தேடுவது தான் வாழ்க்கை

அல்ல, திட்டங்கள்

 எப்போதும் பார்க்க வேண்டியது கட்டங்கள் அல்ல, திட்டங்கள்

அத்தப்பூ கோலமே

  பொன்னிற புடவை உடுத்தி, புன்னகையுடன் என்னை கடந்து செல்லும் அத்தப்பூ கோலமே, திருவோணம் எனக்கு தந்த திருமகள் நீயோ

மீண்டும் மின்னும் நட்சத்திரம்

  நட்சத்திரம் போல் மின்னிய நாட்கள் போய், மிச்ச நாட்களை எண்ணும் தருணத்தில், உன்னுடன் மகிழ்ந்த பொன்னான நாட்களை எண்ணும் போது மீண்டும் மின்னும் நட்சத்திரம்

மக்களிடம் பொறுமை அதிகமாகிவிட்டது

 மக்களிடம் பொறுமை அதிகமாகிவிட்டது,எந்த விலைவாசி உயர்வும், கட்டண உயர்வும் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை, எந்த அநியாயங்களையும் தட்டி கேட்பதும் இல்லை

இளைய சமுதாயமே இதில் அல்ல உன் இன்பம்

  சீவல் பெட்டி, கள், மூக்கு பொடி மறைந்து 

சிகரெட், பான் பராக், சாராயம், கஞ்சா கல்லா கட்டும் காலம், இளைய சமுதாயமே இதில் அல்ல உன் இன்பம், இதை உணர்ந்தால் எதிர் காலம் இன்பம்


பிரம்மனும் தாயும்

 பிரம்மனும் தாயும் ஒன்று தானோ எனக்கு உயிர் கொடுத்தாள்

இது தான் வாழ்க்கை, இது தான் பயணம்

 பல கனவுகளை சுமந்து நாமும், 

நம்மை சுற்றி உள்ளவர்களும், நொடி

பொழுதில் இயக்கம் நிற்கையில் கனவுகள்

மண்ணாக, காட்சிகள் மாறுகின்றன,இது தான் வாழ்க்கை, இது தான் பயணம், தொடர்கிறது கண்களின் ஈர கசிவோடு

ஒளி வாங்கி

 அழகியே, நீ செல்பி எடுக்கும் போது, உன் அழகில் சொக்கி ஒளி வாங்கி மூடாமல் திகைத்து நிற்கிறது என்னைப் போலவே