Thursday, December 15, 2022

மீண்டும் மீண்டும்

 மீண்டும் மீண்டும் காதல் வருமா? உன்னை ஒவ்வொரு முறையும் பார்கையில், நினைக்கையில் காதலை புதுப்பித்து கொண்டே இருக்கின்றேன்

Work from home

 முகம் தெரியாமல் பேசி, பழகி, வேலை செய்து, பழமை பேசி, சிரித்து,அனுபவம் பகிர்ந்து, எப்போதாவது காணொளியில் பார்த்து பேசி காலம் கடத்தும் தாத்தா பாட்டி, 

 மற்றும் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள்(work from home) 

நீ நடமாடும் நேரம்

 ஒரு நொடி பொழுது, உன் மடி சாய்ந்து கண் மூடும் வேளையில் ஆயிரம் கவிதைகள் அதுவே வரும், 

உன் இடை பார்த்து, இடை இடையே இடைவெளி விட்டு நடந்தால் கூட,, இடை செல்லும் குளிர் காற்று சுடும், 

நம் இமை மூடி, பார்வை உரசும் வேளையில் மின்னல் வெட்டு நம்மிடையே தோன்றும்


ஓராயிரம் பேர் பார்த்தாலும், ஓராயிரம் விழிகள் தொடர்ந்தாலும், ஒரு நொடியில் நம் விழிகள் சந்தித்து, மறு நொடியில் சங்கமிக்கும்


விரல் ஸ்பரிசம் மின் காந்த அலையாக இதயத்தில் மின்சாரம் பாய்ச்சும், இதயம் என்னவோ தானியங்கி போல் உன் பின்னே ஓடும்


இசையும் தாளமும் நீ நடமாடும் நேரம் 


உருகும் பனி கூட உறைந்தது, அவளுக்காக உருகும் எனை விட அது அதிகம் உருகுவதில்லையென


நான் உன்னை பார்க்கும் போது, உன் இமைகள் பட படக்கும், இதயம்💜❤️ தட தடக்கும், இரண்டும் சேர்ந்து "சிம்பொனி" இசைக்கும் 

வானிலை மையம்

 வானிலை மையம் சொல்கிறது புயல் வரும், மழை வரும், தூரல் வரும், சாரல் வருமென, நான் சொல்கிறேன் நீ வருவாயென, அறிவியலே குழம்பி விடுகிறது உன் வருகையால்

மகிழ்ச்சியை

 நமக்குள்ளே மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டே இருங்கள், மகிழ்ச்சி ஏற்படுத்தும் செயல்களை செய்து கொண்டே இருங்கள், அந்த மகிழ்ச்சிக்கு தான் இத்தனை போராட்டமும்

கலசம்பாடி தாத்தா வீடு



காவிரியின் கடைமடை, அழகிய வயல்வெளி, தாழ் வாரமும் முற்றமும், அறைகள் நிறைந்த பெரிய ஓட்டு வீடு, அதில் ஊஞ்சல், பத்தாயம், நெல் கோட்டை, வாசலில் திண்ணை, பத்து அடி ஓடி குதித்தால் பெரிய குளம், குளக்கரையில் தென்னையும், பூசனை, கிளி மரம், குளத்தில் சாய்ந்து ஆடும் மாமரம், நாங்கள் ஏறி குளத்தில் குதிக்க மகிழ்ச்சியாக இடம் கொடுத்து பழம் கொடுக்கும், வீட்டின் முன்புறம் பூ தோட்டம், வலது புறம் ஒரு வீடு, வீட்டில் நம் நண்பர்கள், வீட்டை தாண்டி வாய்க்கால், வாய்க்கால் வந்து சேரும் குளம், குளத்தில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால், வாய்க்கால் தாண்டி வயல், வாய்க்கால் ஓரம் பனை மரம், சிறிது தூரத்தில் ஒன்றிரண்டு ஈச்ச மரம், வீட்டின் பின்புறம் வாழை, கீரை, எலுமிச்சை, பெரிய புளிய மரம், 

பின்னால் இருக்கும் அடுப்பறையில் சமையல், நொங்கும், இளநீர் வெட்டி குடிப்பது, மாவு அரைக்க குடக்கல், அம்மி, பின்புறம் வயல்வெளி, அதை தாண்டி வாய்க்கால், வாய்க்கால் இருபுறமும் பனை, மூங்கில் குத்து, வாய்க்கால் தாண்டி பெரிய வயல்வெளி, வீட்டின் இடபுறம் வண்டி கொட்டகை, பாரவண்டி, கூண்டு வண்டி நிற்கும் அங்கே, அதனருகே எருமை மாடு கட்டி அசை போடும், அதன் பின்னே சாணம் குழி அது இறங்கும் வரப்பில், எருமை தாண்டி மாட்டு கொட்டில், அதை தாண்டி வைக்கல் போர், அதை சுற்றி மரங்கள், மாடுகள் இளைப்பாறிய இடமே, இரண்டு வண்டி சோடு  பாதை போகும், இரண்டும் சேர்ந்து ரோடு போகும், குளத்தின் பக்கத்தில் பெருமாள் கோயில், அதனருகே குலதெய்வம், அதனருகே களம், அதை தொடர்ந்து வீதிகள் மற்றும் நம் சொந்த பந்த  நட்பு களின் வீடுகள், மரங்கள் செடிகள், கொடிகள், கரி கோடு, பிள்ளையார் பந்து, கிட்டிபுல்,பனை வண்டி, பனை காத்தாடி, சில்லு விளையாட்டு, ஈச்சம் பழம், நொங்கு, பதனி, இளநீர் தின்பண்டங்கள், வயல் செல்ல பார வண்டி, ஊர் செல்ல கூண்டு வண்டி, மாட்டு வண்டி ஓட்ட சண்டை நடக்கும், மாட்டுக்கு புண்ணாக்கு, ஆட்டுக்கு கருவக்காய்  கொடுத்து அதன் மனதில் இடம் பிடிப்போம், புண்ணாக்கு திருடன் தேடி மாமா அலைவர், குளத்தில் குதித்தால் நேரம் தெரியாது, ஆற்றில் ஆட நேரம் போதாது, களைத்து போய் கயிற்று கட்டிலில் நாங்கள் தூங்க, காலை நேரம் பொழுது விடிந்து சூரியன் தெரியும் குளத்தில்

பட படக்கும்

 எனை பார்த்து பட படக்கும் உன் இமையின் தாக்கம் என் இதயத்தில், இதயம் பட படக்கும், துடிப்பு தட தடக்கும்,  இரத்த ஓட்டத்தை சீராக்க உன் பார்வை தவிர்க்கிறேன, தவிர்க்க முடியாது தவிக்கிறேன்

புல்லாங்குழலின்

 புல்லாங்குழலின் மெல்லிய இசை காதில் விழ, இசை வந்த திசை பார்க்கிறேன் நீ தான் பேசிக் கொண்டு இருக்கிறாய்

ஒரு வார்த்தை

 ஒரு வார்த்தை கவிதை உன் பெயர், 

இரு வார்த்தை கவிதை உன் பெயர்க்கு பின்னால் சேர்ந்து என் பெயர்

நட்சத்திரம்

 வான வீதியில் நடை போடும் நட்சத்திரம் ஒன்று மொட்டை மாடியில் நடைபோடுதோ என்று பார்த்தால், அட என்னவளே நீயா அது

Saturday, September 10, 2022

முயற்சி எதற்கு, பயிற்சி எதற்கு?

 அவரவர் விதிப்படி தான் அனைத்தும் நடக்கின்றது என்றால் முயற்சி எதற்கு, பயிற்சி எதற்கு? ஆனால் அதுவும் விதி தான் 

அக இன்பம்

 அனைவருக்கும் அத்தனை புற இன்பத்தையும் அனுபவிக்க ஆசை, 

அக இன்பம் அதைவிட மேலானது என தெரியும் வரை, ஆனால் அக இன்பம் சிலருக்குத் தான் கிட்டும்

வெற்றியும் அழகு

 தினமும் பூக்கும் புது மலர்கள் போல் உன் புன்னகை,  என் முகம் மலர்கிறது பூவாய், இதழ் பிரித்து நீ பேச, மெய் மறந்து நிற்கின்றேன், என் பெயர் அவ்வளவு அழகா? நீ உச்சரிக்கையில் தெரிகிறது, விழி மோதி விபத்து, என் இதயத்தில் நீ விழுந்தாய், விழுந்தது நீ, உன் காதலில் வீழ்ந்தது நான், தோற்பதும் அழகு உன்னிடத்தில், வெற்றியும் அழகு உன் காதலை பெற்று

அப்பனுக்கு வேலை

 மழலையாய் நீ பேசும் அர்த்தம் இல்லாத வார்த்தைக்கு, அர்த்தம் சொல்லி சிரிப்பது தான் இந்த அப்பனுக்கு வேலை

தீர்ப்பு

 மனைவியிடம் சண்டையிட்டு மகளிடம் முறையிடுகிறேன், தீர்ப்பு மனைவிக்கு சாதகம் என்றாலும் அடிபணிந்து ஏற்கின்றேன்

அதிகாரம்

 அத்தனை அதிகாரம் செய்கின்றேன் அம்மாவை, அக்காவை, மனைவியை, காரம் குறைந்து விடுகிறது மகளிடம்

சொர்க்கம்

 குழந்தையாய் தாயின் மடியில், பெரியவனாக மனைவியின் மடியில், முதுமையில் மகளின் மடியில் மடிந்தால்   மண்ணுலகமே சொர்க்கம் ஆண்களுக்கு

மீண்டும் மீண்டும் காதல் வருமா?

 மீண்டும் மீண்டும் காதல் வருமா? உன்னை ஒவ்வொரு முறையும் பார்கையில், நினைக்கையில் காதலை புதுப்பித்து கொண்டே இருக்கின்றேன்

மழைநீர் சேமிப்போம்

 மேகத்திற்கு தெரியுமா மழையாய் பெய்வோமென, நீர் திவிலைக்கு தெரியுமா தரையில் தலை தெறிக்க விழுவோமென, விழுந்த நீர்த்துளிக்கு தெரியுமா சேர்ந்து காடு மேடு எல்லாம் ஒடுவோம் என்பது, நீருக்கு தெரியுமா கடலை அடைவோமென, நமக்கு தெரியும் எப்படி நீர் தேக்குவதென, சேமிப்பதென, மழைநீர் சேமிப்போம், மண் வளம் காப்போம்

மாசு காற்றோடு நான்


ஏக்கர் கணக்கு நிலத்தில் இயற்கை காற்றோடு வாழ்ந்தார் தாத்தா, கிரவுண்ட் கணக்கு நிலத்தில் மின் விசிறியோடு வாழ்ந்தார் அப்பா,
கால் கிரவுண்ட்  நிலத்தில் மின் குளிரூட்டியோடு மாசு காற்றோடு நான்,
அடுத்த சந்ததிகள்?

அறிய முடியுமா?

 உச்சத்தை அடைந்து பரபரவென வாழும் வாழ்க்கையா? கிடைத்தது கொண்டு, பிடித்ததை செய்து வாழும் வாழ்க்கையா? பிடித்தது எல்லாம் கிடைக்குமா? கிடைத்தது எல்லாம் பிடிக்குமா? நினைத்தது எல்லாம் நடக்குமா? நடப்பதை எல்லாம் முன்பே அறிய முடியுமா? 

தனிமையை குறைத்து, தனித்தன்மையை கூட்டுவோம்

 தனியாக பிறக்கின்றோம், தனியாக இறக்கின்றோம், இடையே உறவுகளுடன் உறவாடி களிக்கின்றோம், தனிமை சிலருக்கு பிடிக்கிறது, சிலருக்கு திணிக்க படுகிறது, தனிமை வெறுமையை ஏற்றி விபரீத எண்ணங்களை கூட்டும், தனிமையை குறைத்து, தனித்தன்மையை கூட்டுவோம்

வாழ்க்கை எனும் நாடக மேடை

 வாழ்க்கை எனும் நாடக மேடையில் நம் கதாபாத்திரத்தில் நடித்து முடித்து செல்வோம், கதாநாயகனாக இருக்கலாம், கடைநிலை ஊழியனாய் இருக்கலாம், துண்டாக, செருப்பாக எதுவாயினும் அதுவே நாம்

பறக்கலாம்

 அந்தி சாயும் நேரம், கீழ்வானம் சிவக்க, பறவைகள் தங்கள் கூடு நோக்கி பறக்க, மெல்லிய காற்றில் நான் உன்னை காதலிக்கிறேன் என்று நான் சொல்ல கேட்டு உன் கன்னம் வெட்கத்தில் கீழ்வானைவிட மேலும் சிவக்கிறது, ஆம் என்று சொல்லி, வா பறக்கலாம் நம் காதல் வானில்

மகிழ்ச்சி

 எவரெஸ்டில் ஏறிதான் மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்பதில்லை, வீட்டில் நாற்காலியில் ஏறி கூட மகிழ்ச்சி கொள்ளலாம்

சில காலம்

 மனதால் பேசியது சில காலம், 

மௌனத்தில் பேசியது சில காலம், 

சைகையால் பேசியது சில காலம்,

வாயால் பேசியது சில காலம், 

பேசாமல் இருப்பதே நல்ல காலம்

தாய் மொழி, நம் தமிழ் மொழி

 

தாய் மொழி, நம் தமிழ் மொழி
இதை விட மூப்பு எதுவும் இல்லை,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
இதை விட இளமை எதுவும் இல்லை,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
இதை விட அழகு எதுவும் இல்லை,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
இதை விட இலக்கணம் எதுக்கும் இல்லை,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
பழமையும் புதுமையும் கலந்த மொழி,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
உலகெங்கும் ஆண்ட உயர்ந்த மொழி,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
பல புதுமைகள் அறிவியல் புகுத்தி காத்திடுவோம்,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
அதை அனைவரும் கற்றுக்  வளர்திடுவோம்,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
அதை உலகின் உச்சியில் நிறுத்திடுவோம்,
தாய் மொழி, நம் தமிழ் மொழி,
தாய் மொழி, நம் தமிழ் மொழி

ஒரு பொழுது சிரிக்கிறாய்

 ஒரு பொழுது சிரிக்கிறாய், 

ஒரு பொழுது இரசிக்கிறாய், 

ஒரு பொழுது தவிர்க்கிறாய், 

ஒரு பொழுது தவிக்கிறாய், 

புரியாத புதிராக இருக்கிறாய், 

எதுவாயினும் சொல்லி விடு, 

மனதார ஏற்றுக் கொள்கிறேன்

சொல்லி மறுத்த காதல்

 சொல்லி மறுத்த காதல், 

சொல்லாமல் மறைத்த காதல், 

மனதோடு மறைத்த காதல், 

காதலித்து பிரிந்த காதல், 

கல்யாணத்தில் முடிந்த காதல், 

எந்த காதலிலும் "காதல்" ஒன்று தான்

ஏதோ "ஒன்று"

 ஏதோ "ஒன்று" பிடித்தாலே காதலிக்கிறோம்,  ஏதோ "ஒன்று" பிடிக்காமல் திருமணத்தை முறிக்கிறோம், 

எதுவாயினும் "ஒன்றாய்" இருக்க வேண்டும் என்பது போய், "ஒற்றை "

விசயத்தில் இரண்டாய் பிரிகிறோம்

காதலா

 கைகள் உரசி நடப்பதும், பேனா வாங்கி கொடுப்பதும், கடலை மிட்டாயை காக்கா கடி கடிப்பதும், எது பேசினாலும் சிரிப்பதும், ஓரமாக பார்த்து இரசிப்பதும் பள்ளி பருவத்தில் காதலாக தெரியும், சிலருக்கு அது உண்மையானது, சிலருக்கு பொய்யானது

முதல் கோணலே


மக்கள் மன்றங்களுக்கு, சட்ட மன்றம், பாராளுமன்றத்திற்கு சரியான நபரை தேர்ந்தெடுக்கும் தகுதியை மக்களாகிய நாம் வளர்த்து கொள்ள வேண்டும்,  முதல் கோணலே முழுவதும் கோணலாகிறது

நிகழ்வு

 சிலருக்கு கனவு, சிலருக்கு அது நிகழ்வு, உங்கள் கனவு நிகழ்வாக மாறினால் அது உன் வெற்றியை குறிக்கும்


உணர்வு இரண்டு

 பிச்சை போடுபவரும், வாங்கியவரும் ஒரே உணவு விடுதியில் உணவு வாங்கி உண்டனர், உணவு ஒன்று, உணர்வு இரண்டு

வேலை

 புகழ் மிக்க அலுவலகத்தில் வேலை செய்வதாக கடை நிலை ஊழியர், மேலாளர், செயல் அதிகாரி அவரவர் வீட்டில் சொல்லி கர்வம் கொண்டனர்

(ஸ்வர்ண)லஷ்மி சீனிவாசன்


(ஸ்வர்ண)லஷ்மியை பிடிக்காத சீனிவாசன் உண்டோ? பார்த்த முதல் நாளே, (ஸ்வர்ண)லஷ்மியை மனதில் ஏந்தி மானசீக காதலை மனதில் வைத்து, பெற்றோரும் மற்றோரும் வாழ்த்தி நிச்சயிக்கும் நன்னாளில்,
மங்கல வாத்தியம் முழங்க, எல்லாரும் மனதார வாழ்த்த , வரும் மணநாளில்
(ஸ்வர்ண)லஷ்மியை கரம் பிடித்து, பதினாறும் பெற்று பெரும் வாழ்வு வாழ வாழ்த்துக்கிறோம் பள்ளி நண்பர்கள்

Thursday, June 2, 2022

வளர்ச்சி

 அசாதாரண வளர்ச்சி வரவில்லை என சிலர், வளர்ச்சி வரவில்லை என சிலர், வீழ்ச்சி என சிலர் புலம்பல் இல்லா இடம் ஏது


இலக்கு


இலக்குகள் நோக்கி மெதுவாக நகரும் போது, இலக்குகளும் நகருகிறது, ஒரு இலக்கை அடைந்துவிட்டால் அடுத்த இலக்கு நோக்கி பயணம் நகருகிறது

பேசாமல்

 பேசாமல் ஏன் இருக்கிறார்கள் என்பதை எப்படி பேசாமல் தெரிந்து கொள்வது

சந்தர்ப்பம்

 திருந்துவதற்கு சந்தர்ப்பம் தானாக வராது, நாம் தான் திருந்த வேண்டும்

பூவாக மலர்ந்தது

 இதழ் விரிந்தால் மொட்டு பூவாக மலரும், உன் இதழ் பிரிந்த வார்த்தைகளால் என் இதயத்தில் காதல் பூவாக மலர்ந்தது

உறுதி செய்ய முடியுமா?

 உன்னை சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும், ஐந்து பேராவது உனக்காக இருப்பார்களா என

உறுதி செய்ய முடியுமா? 

உறவுகள் உயிர்ப்புடன்

 நம்மை நேசிப்பதற்கு, நாம் நேசிப்பதற்கு இன்னும் சிலர் இருப்பதால் தான், இன்னும் உறவுகள் உயிர்ப்புடன் இருக்கிறது

முற்றுப்பெறா சொற்றொடர்

 ஒற்றை சொல் அல்ல "காதல்", அது முற்றுப்பெறா சொற்றொடர்

கடன் வாங்க

 வண்டி வாங்க கடன் வாங்கிய காலம் போய், எரிபொருள் (பெட்ரோல்) போடவே கடன் வாங்க வேண்டுமோ? 

மாறாத அன்பு, தீராத காதல்

 வருடங்கள் கடந்து போக, 

மாறாத அன்பு, தீராத காதல், 

கூடிக் கொண்டே போகும் அன்பு, 

மோகம் குறைந்து நேசம் நீளமாகும் 

நம் காதல் 

செல்வந்தன்

 காதல், நட்பு, உறவுகள் உனக்கு என்று இருந்தால் நீ தான் உலகின் மிக பெரிய செல்வந்தன்


தெரிந்த பக்கங்களை

 பெயர், புகழ், பணம் பெற்ற அண்டை அயலாரின் தெரிந்த பக்கங்களை வைத்து நம்மோடு ஒப்பீடுவதை விட, தெரியாத வலிகள் நிறைந்த பக்கம் பார்த்து நாம் எவ்வளவு நன்றாக இருக்கிறோம் என பார்த்து கொள்ளுங்கள்

ஒதுக்கியது, ஒதுங்கியது

 கால சக்கரத்தில் கடமைகள் மாறும், நிலைமை மாறும், கோபம் கூட நீர்த்து போகும், ஆனால் ஒதுக்கியது, ஒதுங்கியது திரும்பி வாராது

அழகான தருணங்கள்

 வாழ்க்கையின் அழகான தருணங்கள்

பின்னாளில் அசை போட உதவும்

ஒருவருக்கு புதிய அனுபவம்

 ஒருவருக்கு புதிய அனுபவம்,  பலருக்கு பழைய அனுபவம், இருந்தாலும் மகிழ்ச்சி கொள்ளும் நம் உள்ளம்

என்னுயிர் நீதானே

 அருகில் இருந்தாலும், தூரத்தில் இருந்தாலும் என்னுயிர் நீதானே

தனிமை, வெறுமை அல்ல

 உனக்காக நேரம் அது, உன்னதமாக பயன்படுத்த கற்றுக் கொண்டால், தனிமை, வெறுமை அல்ல, கொடுமை அல்ல, தனித்துவமானது

அன்பு கைதி நான்

 சிறைப்பட்டு பல வருடங்களாகிறது  உன் அன்பு சிறையில், இதய சிறையில் ஆயுள் முழுவதும் கைதியாக இருப்பேன், விடுதலையை விரும்பாத அன்பு கைதி நான்

நம்மை" யாரும் பார்பார்களா

 குழந்தையாக, குமரனாக, வாலிபனாக, ஏன் கணவனாக கூட "நான்" என்ற அகங்காரத்தில் இருக்கிறோம், தந்தையான பின் "நாம்" என்ற உணர்வு வரத் தொடங்குகிறது, வயோதிகத்தில் "நம்மை" யாரும் பார்பார்களா, பேசுவார்களா  என்ற ஏக்கம் பெரும் மூச்சாக வருகிறது

Wednesday, March 30, 2022

நம் குடும்பம்

 அன்பு, அறிவு, பண்பு, பாசம், சொந்தம், பந்தம் முக்கியமென குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைக்க முடியவில்லை, வாழ்ந்து காட்ட வேண்டுமோ? 


நம் குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகளென இருப்பதால், நம் பிள்ளைகளின் குடும்பத்தில் நமக்கு இடம் ஏது? 

இலக்குகள்

 

இதழ் விரிந்தால் மொட்டு பூவாக மலரும், உன் இதழ் பிரிந்த வார்த்தைகளால் என் இதயத்தில் காதல் பூவாக மலர்ந்தது

திருந்துவதற்கு சந்தர்ப்பம் தானாக வராது, நாம் தான் திருந்த வேண்டும்

பேசாமல் ஏன் இருக்கிறார்கள் என்பதை எப்படி பேசாமல் தெரிந்து கொள்வது

இலக்குகள் நோக்கி மெதுவாக நகரும் போது, இலக்குகளும் நகருகிறது, ஒரு இலக்கை அடைந்துவிட்டால் அடுத்த இலக்கு நோக்கி பயணம் நகருகிறது

அசாதாரண வளர்ச்சி வரவில்லை என சிலர், வளர்ச்சி வரவில்லை என சிலர், வீழ்ச்சி என சிலர் புலம்பல் இல்லா இடம் ஏது

தவறுகள்

 

தவறுகள் கூட சரியாக தெரிகிறது,
மற்றவர்கள் தவறுகளை மதிக்கும் போது

கண்கள் இரண்டு, பார்வை ஒன்று,
கணவன், மனைவி அதுபோல

கிராமத்தையும், நவநாகரீக நாட்டையும், நகரத்தையும் பார்த்தவனுக்கு தெரியும்,
கிராமம் நாம் போற்ற வேண்டிய பொக்கிஷம் என்று

மக்களின் திரும்பி அழைக்கும் அதிகாரம் ஒன்றே, அரசியல்வாதிகளை மக்கள் பணி நோக்கி திரும்பி பார்க்க வைக்கும்

சட்டங்கள் இருந்தாலும், விரைந்து கொடுக்கப்படும் நியாயமான தீர்ப்புகள் மூலம் குற்றங்களை குறைக்கலாம்

களைகளை நீக்கினால் தான் நல்ல விளைச்சலை பார்க்கலாம், கையூட்டு, ஊழலை ஒழித்தால்தான் நேர்ப்பட்ட சமுதாயத்தை பார்க்க முடியும்

மாறாதது

 மாற்றம் ஒன்றே மாறாதது, அவரவர் அடிப்படை குணம் மாறாதது

என் தித்திக்கும் கரும்பே

 என் தித்திக்கும் கரும்பே, மஞ்சள்

நிறத்தவளே,உன் அன்பு 

பொங்கி வரும் பால் போல வந்து, பால் மழையில் நனையும் பானை போல் எங்களை நனைக்கட்டும், சூரியன் கதிர் போல உன் அறிவு கதிர்கள் உலகமெங்கும் பரவட்டும், கோமாதாவாய் குடும்பத்தைக் காக்கும் நீ, மகர சோதியாய் எங்களை வழி நடத்து, ஜல்லிக்கட்டு காளை நாங்கள், நீ எங்களை கயிறு பிடித்து முன் செல்லும் குடும்ப விளக்கு, வழி காட்டி, குடும்பம் சக்கரை பொங்கலாய் குழைந்து தித்திக்கட்டும

ஊரடங்கு

 ஊரடங்கு என் உள்ளத்திற்கு

அல்ல , உனை சுற்றியே என் எண்ணங்கள்

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

 காதலை உன்னிடத்தில் சொல்ல

நினைக்கும் போதெல்லாம், உன் யதார்த்தம் என்னை யோசிக்க வைக்கிறது, சொல்லாத காதல் சரியா? சொல்லிய பின்னர் பிரிதல் சரியா? 

எண்ணுவதை சொல்லாமல், சொல்லாமல் விட்டதை பின்னர் எண்ணுவதா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், எண்ணத்தையும் கொடுத்தேன்

உன்னையும் நம்பு,

 நல்ல நேரம், பணம், நண்பர்கள், உறவினர்கள், கடவுள், சம்பிரதாயம் என எது வேண்டுமானால் நம்பு, அதோடு உன்னையும் நம்பு, உலகம் உன் வசப்படும்

மனத்திண்மை கொண்டு முன்னேறு

 கொண்டாட்டங்கள் முடிந்து, 

திண்டாட்டம் தெரியும் போது, 

மனத்திண்மை கொண்டு முன்னேறு, 

திண்டாட்டம் குறைந்து, கொண்டாட்டம் வரும்

நாளைய விடியல்

 புத்தாண்டின் முதல் நாள், 

புதிய தொடக்கம், எதுவும்

மாறவில்லை, வாழ்க்கையை

மாற்ற முடியும் என்ற

நம்பிக்கையில், நாளைய விடியல்